புதிதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்களான ஏதெர் 450X, ஓலா S1 Pro, ஹீரோ விடா மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் போன்ற முக்கிய போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் அதிக ரேஞ்சு வழங்கும் ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் வந்துள்ள சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சவால் விடுக்கும் ரேஞ்சினை ஓலா எஸ்1 புரோ கொண்டுள்ளது.
Simple one vs Ather 450X vs Vida V1 vs Ola S1 Pro vs TVS iQube
தற்பொழுது நிறுவனங்கள் வழங்கியுள்ள நுட்பவிபரங்கள் சார்ந்த அம்சங்களில் ரேஞ்சு, பெர்ஃபாமென்ஸ், டாப் ஸ்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை தொகுத்து பார்க்கலாம்.
Specifications | Simple One | Ather 450X | Ola S1 Pro | Vida V1 | TVS iQube |
Battery Pack | 5kWh | 3.7kW | 4kWh | 3.94kWh | 3.04kW |
Motor | 4.5kW | 3.3kW | 5.5kW | 3.9kW | 3kW |
Peak Power | 8.5kW | 6kW | 8.5kW | 6kW | 4.4kW |
Torque | 72Nm | 26Nm | 58Nm | 25Nm | 33Nm |
Claimed Top Speed | 105kmph | 90kmph | 116kmph | 80kmph | 78kmph |
0-40kmph claimed | 2.77 secs | 3.3 secs | 2.9 secs | 3.2 secs | 4.2 secs |
Kerb weight | 134kg | 111.6kg | 125kg | 125kg | 118.8kg |
மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டராக விளங்குகின்ற போட்டியாளர்களை விட அதிகப்படியான பவரை சிம்பிள் ஒன் வெளிப்படுத்துகின்றது. அதிகபட்ச வேகத்தை தொடர்ந்து ஓலா தக்கவைத்துக் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, 0-40 கிமீ வேகத்தை தொடுவதிலும் சிம்பிள் ஒன் முன்னிலையில் உள்ளது.
ரேஞ்சு ஒப்பீடு
சிம்பிள் ஒன் பேட்டரி மின்சார ஸ்கூட்டருடன் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பீடுகையில் கூடுதலான ரேஞ்சை வெளிப்படுத்தலாம். ஆனால் சிம்பிள் ஒன் தவிர மற்ற மாடல்களின் ரேஞ்சு ஏறக்குறைய பல தரப்பட்ட பயனாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாகும். இந்த ரேஞ்சு ஈக்கோ மோடில் மட்டுமே சாத்தியமாகும்.
Specifications | Simple One | Ather 450X | Ola S1 Pro | Vida V1 | TVS iQube |
Range (IDC) | 212km | 146km | 181km | 165km | 100km |
Real World | 160Km (expect) | 100km | 135km | 100km | 80km |
Riding Modes | Ride, Eco, Dash , Sonic | Warp, Sport, Ride, Eco, SmartEco | Eco, Normal, Sports, Hyper | Sport, Ride, Eco, Custom | Eco, Power |
Simple One vs Vida V1 Vs Ather 450X vs Ola S1 Pro vs TVS iQube – விலை ஒப்பீடு
simple one – ₹ 1.45 லட்சம்
simple one Dual tone – ₹ 1.50 லட்சம்
750 Watts Charger ₹ 13,000
(ex-showroom Bengaluru)
e-Scooter | Price |
Simple One | ₹ 1,56,089 – ₹ 1,66,054 |
Vida V1 | ₹ 1,28,350 – ₹ 1,48,824 |
Ather 450X | ₹ 1,22,189 – ₹ 1,52,539 |
Ola S1 Air, S1, S1 Pro | ₹ 91, 854 – ₹ 1,40,599 |
TVS iQube | ₹ 1,14,936 – ₹ 1,21,057 |
குறிப்பாக விலை FAME-II மானியம் ஜூன் 1 முதல் அதிகரிக்கப்பட்ட பிறகு அனைத்து ஸ்கூட்டர்களின் விலையும் ரூ.25,000 முதல் ரூ.35,000 உயர்த்தப்பட உள்ளது.சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் FAME-II மானியம் குறைக்கப்பட்ட விலையாகும். மற்ற மாடல்கள் குறைக்கப்படாத விலை ஆகும்.
சிம்பிள் ஒன் தமிழ்நாடு விலை அறிவிக்கப்படவில்லை.
(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)