இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில், குறைந்த விலையில் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நோக்கில் சிம்பிள் எனர்ஜி இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட உள்ளதை உறுதி செய்துள்ளது.
212 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற சிம்பிள் ஒன் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து டெலிவரியை துவங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் முன்னணி நகரங்களில் 100 க்கு மேற்பட்ட டீலர்களை துவங்க உள்ளது.
Simple Energy escooter
சிம்பிள் எனர்ஜி வரும் காலாண்டில் இரண்டு புதிய குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர்கள் “கவர்ச்சிகரமான விலையில்” இருக்கும் என இந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இவற்றில் குறைந்தபட்ச வசதி பெற்ற வேரியண்ட் சுமார் ரூ. 1 லட்சத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.
சிம்பிள் எனர்ஜியின் புதிய மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்களுக்கு பேட்டரி பேக், வரம்பு மற்றும் டாப் ஸ்பீட் போன்ற தகவல் தற்பொழுது கிடைக்கவில்லை. சில அம்சங்கள் கிடைக்காவிட்டாலும், சிம்பிள் எனர்ஜியால் பின்பற்றப்படும் மேம்பட்ட பாதுகாப்புத் தரத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
100-120 கிமீ ரேஞ்சு வெளிப்படுத்தும் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம், தற்பொழுது விற்பனையில் உள்ள சிம்பிள் ஒன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பேட்டரி அமைப்பில் மட்டும் மாற்றம் இருக்கலாம்.