சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு ரூ.99,999 அறிமுக சலுகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாட் ஒன் ஸ்கூட்டரை சிங்கிள் சார்ஜ் மூலம் 152 கிமீ ரேஞ்ச் ஆக IDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற ஏதெர் 450S, ஓலா S1X, மற்றும் S1X+, கைனெடிக் ஜூலு உள்ளிட்ட பல்வேறு குறைந்த விலை ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Simple Dot One
சிம்பிள் எனர்ஜி பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பாளர் ஏற்கனவே ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் உள்ள நிலையில், தற்பொழுது இரண்டாவது மாடலாக டாட் ஒன் ஸ்கூட்டர் 3.7Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ ஆக உள்ளது. இந்த மாடலை சிங்கிள் சார்ஜில் 152 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டாட் ஒன் மாடலில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 8.5 kW (11.4 bhp) பவர் மற்றும் 72 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.77 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Eco, Ride, Dash மற்றும் Sonic என நான்கு ரைடிங் மோடு பெற்று CBS பிரேக் உடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு 90/90 டியூப்லெஸ் டயர்கள் கொண்ட 12-இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது.
டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று 35 லிட்டர் கொள்ளளவு வசதியை இருக்கைக்கு அடியில் பெற்றுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆனது 164.5 மிமீ பெற்று கர்ப் எடை 126 கிலோ ஆகும்.
0-80 % சார்ஜிங் செய்ய வீட்டு சார்ஜர் மூலம் 3 மணி நேரம் 47 நிமிடமும், ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-80 % பெற நிமிடத்திற்கு 1.5 கிமீ என்ற வேகத்தில் சார்ஜ் ஆகும் என இந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Simple DotOne – ₹ 99,999
Simple One – ₹ 1,58,000
சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் 212 கிமீ ரேஞ்ச் வழங்குவதுடன் 5.0Kwh பேட்டரி பெற்றதாக உள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவில் கிடைக்க உள்ள இந்த மாடல் மற்ற மாநிலங்களில் ஜனவரி 2024 முதல் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.