சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் புதிய டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக சலுகையாக ரூ.1 லட்சம் ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.1.40 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்பாக 212 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து டெலிவரிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 1, 2024 முதல் டாட் ஒன் ஸ்கூட்டருக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Simple Dotone Escooter
புதிதாக வந்துள்ள டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் வடிவமைப்பு ஏற்கனவே விற்பனையில் உள்ள ஒன் பேட்டரி ஸ்கூட்டரை போலவே அமைந்திருக்கின்றது. கருப்பு, வெள்ளை, நீளம், சிவப்பு, பிரேசன் X, மற்றும் லைட் X என 6 விதமான நிறங்களை பெற்றுள்ள இந்த மாடலில் இருபக்கமும் CBS பிரேக் உடன் முன்புறத்தில் 200mm மற்றும் 190mm பின்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு 90/90 டியூப்லெஸ் டயர் கொண்ட 12-இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது.
டாட் ஒன் ஸ்கூட்டர் மாடலில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 8.5 kW (11.4 bhp) பவர் மற்றும் 72 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.77 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ ஆக உள்ளது.
Eco, Ride, Dash மற்றும் Strove என நான்கு விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ள மாடல் 0-80 % சார்ஜிங் செய்ய வீட்டு சார்ஜர் மூலம் 3 மணி நேரம் 47 நிமிடமும், ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-80 % பெற நிமிடத்திற்கு 1.5 கிமீ என்ற வேகத்தில் சார்ஜ் ஆகும். 750W சார்ஜருடன் வருகின்றது.
புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1947 முன்பதிவு கட்டணமாக செலுத்தி ஜனவரி 27, 2024 முதல் அனைவரும் முன்பதிவு செய்யலாம்.