சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா 2017 நிகழ்ச்சி கோவாவில் நடைபெற்று வருகின்றது. ரைடர் மேனியா அரங்கில் கான்டினென்டினல் ஜிடி , இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பபட்டுள்ளது.
ரைடர் மேனியா 2017
ஆர்இ மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் மற்றும் ரைடர்கள் என 6114 நபர்கள் பதிவு செய்திருக்கும் ரைடர் மேனியா 2017-ல் இசை, கலந்துரையாடல், மோட்டார்சைக்கிள் ரேஸ் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அரங்கில் சமீபத்தில் மிலன் நகரில் நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650, இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடலில் 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
கிளாசிக் தோற்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு மோட்டார் சைக்கிள் மாடல்களும் அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.