117 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அலாய் வீல் , ட்யூப்லெஸ் டயர் கொண்ட முதல் தண்டர்பேர்டு X வரிசை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மாடலை ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X
கஸ்டமைஸ் செய்யும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு ஃபேடக்ட்ரி ஃபிட்டிங் உடன் கஸ்டம் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் க்ரூஸர் ரக தண்டர்பேர்ட் 350X & 500X மாடல்களின் மீதான ஈர்ப்பினை அதிகரிக்கும் வகையில் மிகவும் ஸ்டைலிஷாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டைல்
கஸ்டமைஸ் பைக் போன்ற தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் வகையில் குறைந்த நீளம் பெற்ற ஹேண்டில் பார், பெட்ரோல் டேங்க் தவிர மற்ற பாகங்கள் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு, இரட்டை பிரிவு இருக்கைக்கு மாற்றாக ஒற்றை பிரிவு கொண்டு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
117 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக 9 ஸ்போக்குகளை பெற்ற அலாய் வீல் வழங்கப்பட்டு கூடுதலாக ட்யூப்லெஸ் டயரினை வழங்கியுள்ளது. மேலும் எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கில் கூடுதலாக பகல் நேரத்திலும் எரியும் வகையிலான எல்இடி ரன்னிங் விக்கினை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் இருபிரிவு அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது.
தண்டர்பேர்ட் 350X மாடலில் சிவப்பு (Roving Red) மற்றும் வெள்ளை (Whimsical White) ஆகிய இரு நிறங்களும், தண்டர்பேர்டு 500X மாடலில் நீலம் ( Drifter Blue) மற்றும் ஆரஞ்சு (Getaway Orange) ஆகிய இரு நிறங்களை பெற்றிருக்கும்.
எஞ்சின்
எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் உட்பட மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படாமல் , முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் ஏபிஎஸ் தொடர்ந்து வழங்கப்படாமல் உள்ளது.
தண்டர்பேர்ட் 350X பைக்கில் 19.8 bhp பவரை வெளிப்படுத்தும் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 28 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
தண்டர்பேர்ட் 500X பைக்கில் 27.2 bhp பவரை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 41 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கிறது.
போட்டியாளர்கள்
இந்தியாவில் க்ரூஸர் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் அவென்ஜர் 220 குறைந்த சிசியில் கிடைத்து வரும் நிலையில் நேரடியான போட்டியாளாராக யூஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் விளங்குகின்றது.
விலை
சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுடன் கூடுதல் விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தண்டர்பேர்டு எக்ஸ் பைக் சாதாரண மாடலை விட ரூ.8000 வரை கூடுதலாக விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X – ரூ. 1.72 லட்சம்
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X – ரூ. 2.18 லட்சம்
(ஆன்ரோடு தமிழ்நாடு )
வருகை விபரம்
தற்போது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கம்பெனியின் கீழ் நாடு முழுவதும் செயல்படுகின்ற 321 டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரிதொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கிளாசிக் மாடலுக்கு அலாய் வீல் வழங்கப்படுமா ?
நிச்சியமாக , ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, புல்லட் ஆகிய மாடல்களுக்கு அலாய் வீல் ஆப்ஷனை வழங்க வாய்ப்பே இல்லை என உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்த மாடல்கள் தொடர்ந்து தங்கள் பாரம்பரியத்தை கொண்டதாகவே விளங்கும் என என்ஃபீல்ட் குறிப்பிடுகின்றது.