ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரீமியம் க்ரூஸர் 650சிசி பைக்கிற்கு சூப்பர் மீட்டியோர் என்ற பெயரினை பயன்படுத்த உள்ள நிலையில் 2021 EICMA ஷோவில் முதன்முறையாக காட்சிக்கு வெளியிடப்பட உள்ளது.
சூப்பர் மீட்டியோர் என்ற பெயரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு புதிதான பெயரல்ல, 50 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க சந்தையில் இங்கிலாந்தின் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்து வந்த பைக்கின் பெயரே ஆகும்.
கடந்த சில மாதங்களாகவே சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள 650சிசி என்ஜின் பெற்றிருப்பதாக அமைந்திருந்தது. விற்பனையில் உள்ள இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி மாடல்களில் உள்ள அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான ரெட்ரோ தோற்ற அமைப்பில் வட்ட வடிவ ஹெட்லைட், இரட்டை வட்ட வடிவ கிளஸ்ட்டர் அமைப்பினை கொண்டிருக்கின்றது. அடுத்தப்படியாக முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் , பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் மிகவும் கோண வடிவ முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
வரும் 23 நவம்பர், 2021 முதல் 28 நவம்பர், 2021 வரை இத்தாலியில் நடைபெறுகின்ற EICMA அரங்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோரை அறிமுகம் செய்வதுடன், இந்திய சந்தையில் விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.