Categories: Bike News

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் சோதனை ஓட்டம்

royal enfield sg650

648cc என்ஜின் பெற்ற மற்றொரு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த பைக்கின் பெயர் ஷாட்கன் 650 (ShotGun) என அழைக்கப்படலாம்.

தற்பொழுது 650cc என்ஜின் பெற்ற மாடல்கள் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 என மூன்று மாடல்களுடன் அடுத்து பாப் ஸ்டைல் பெற்ற ஷாட்கன் 650 விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

Royal Enfield ShotGun 650

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் மாடல் முரட்டுத்தனமான மோட்டார்சைக்கிள் முழுவதுமாக உற்பத்தி நிலை எட்டியுள்ளது. இது சமீபத்தில் விற்பனை துவங்கப்பட்ட சூப்பர் மீட்டியோர் மாடலுக்கு இணையான பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும். நிச்சயமாக, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த மாடலுக்கும் முன்புறத்தில் USD ஃபோர்க்கு, பின்புற ட்வீன் ஷாக் அப்சார்பர், எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுத்திருக்கும்.

சாட்கன் பைக்கில் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டிருக்கும்.

விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் அறிமுகமாகலாம்.

image source