100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 அடிப்படையில் ஐகான் மோட்டார்ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ள ஷாட்கன் 650 ஐகான் லிமிடெட் எடிசன் விலை ரூ.4,25,000 எக்ஸ்-ஷோரூம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
Royal Enfield SHOTGUN 650 ICON edition
ஷாட்கன் 650 அடிப்படையிலான புதிய லிமிடெட் எடிசன் இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாகவே 100 மாடல்கள் மட்டுமே கிடைக்கும். கூடுதலாக இந்த பைக் வாங்குவோருக்கு ICON வடிவமைத்த பிரத்யேக ஸ்லாப்டவுன் இன்டர்செப்ட் RE ரைடிங் ஜாக்கெட் கிடைக்க உள்ளது.
இந்த மாடலில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 650 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 22-30 கிமீ வரை கிடைக்கலாம்.
மற்ற மாடலை விட வேறுபடுத்தும் வகையில் பந்தயங்களில் பயன்படுத்தும், கிராபிக்ஸின் அடிப்படையிலான 3 விதமான வண்ணம் மற்றும் தங்க நிற கான்ட்ராஸ்ட் கட் ரிம்கள், நீல வண்ண ஷாக் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட தனித்துவமான சிறப்பு பாகங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த லோகோ மற்றும் பார்-எண்ட் கண்ணாடிகள் கொண்ட சிவப்பு இருக்கை உள்ளது.
இந்த பிரத்யேக மாடலை எவ்வாறு பதிவு செய்து சொந்தமாக்குவது?
ராயல் என்ஃபீல்டு இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு ஷாட்கன் 650 பைக்கின் 100 யூனிட்களை உலகளவில் ஆர்வலர்களுக்கு மட்டுமே வழங்கும். பிப்ரவரி 6, 2025 முதல், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் RE ஆப் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
அதே நேரத்தில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள்; ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் செக் குடியரசு;
வட அமெரிக்காவில் அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா மற்றும் மெக்சிகோ கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்:
www.royalenfield.com/in/en/shotgun-icon-edition/
பிப்ரவரி 12, 2025 அன்று, இந்தியாவில் RE , பிற பிராந்தியங்களுக்கான ராயல் என்ஃபீல்ட் இணையதளத்திலும் GMT நேரலையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். அதாவது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் முன்பதிவு செய்யும் முதல் 25 வாடிக்கையாளர்கள் மட்டும் ஷாட்கன் 650 பெறுவார்கள்.