மோட்டோவெர்ஸ் 2024ல் ஸ்கிராம் 411 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பல்வேறு மாறுதல்களை பெற்று மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் எஞ்சின் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய மாடலை விட சக்தி வாய்ந்ததாகவும் அதே நேரத்தில் நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வோர்களுக்கும் ஏற்றதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Royal Enfield Scram 440
முந்தைய ஸ்கிராம் 411cc எஞ்சினுக்கு பதிலாக தற்பொழுது 443cc எஞ்சினாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எஞ்சின் போர் அளவினை 3மிமீ உயர்த்திய காரணத்தால் 443சிசி எஞ்சினாக மாறி உள்ள புதிய ஸ்கிராம் 440 அதிகபட்சமாக 25.4hp பவரை 6,250rpm-லும், 34Nm டார்க் 4,000rpmல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மாற்றியமைக்கப்பட்டுள்ள கியர்பாக்ஸ் மூலம் இலகுவான கிளட்ச் பயன்பாடு மற்றும் புதிய எஞ்சின் சார்ந்த அதிர்வுகள், இறைச்சல் குறைக்கப்பட்டுள்ளது.
முந்தைய 411சிசி மாடல் 24.3hp பவரினை 6,500rpmலும் மற்றும் 32Nm டார்க் 4,250rpm-ல் வெளிப்படுத்தி 5 வேக கியர்பாக்ஸ் பெற்றிருந்தது.
அடிப்படையான சேஸ் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை, புதிய பைக்கின் நீளம் மற்றும் வீல்பேஸில் 5 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் தொடர்ந்து 190மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 180 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் அப்சார்பர் பெற்று முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க்குடன், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் உள்ளது.
ஸ்கிராம் 440 மாடல் முந்தைய ஸ்கிராம் 411 போல 19 அங்குல முன் சக்கரம் மற்றும் 17 அங்குல பின்புற சக்கரத்த்தை பெற்றுள்ளது. ,அலாய் வீல் உடன் டியூப்லெஸ் டயர் மற்றும் ஸ்போக் வீல் உடன் ட்யப் டயர் என இரு வேரியண்டடை பெற்றுள்ளது. புதிய மாடலின் எடை 187 கிலோ (எரிபொருள் இல்லாமல்), ஸ்க்ராம் 411 பைக்கினை விட 2 கிலோ அதிகரித்துள்ளது.
வழக்கமான அடிப்படையான ஸ்கிராம் 411 டிசைனை பெற்றாலும் புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட் உடன் செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் 5 புதிய நிறங்களை கொண்டுள்ளது. ஃபோர்ஸ் புளூ, ஃபோர்ஸ் கிரே, ஃபோர்ஸ் டீல், டிரெயில் கிரீன், டிரெயில் ப்ளூ என மொத்தம் ஐந்து வண்ணத்தை புதிய மோட்டார்சைக்கிள் பெறுகின்றது.
ஜனவரி 2025ல் விலை அறிவிக்கப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பைக்கின் விலை ரூ.2.25 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.