ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 440 விற்பனைக்கு ரூபாய் 2.08 லட்சம் முதல் ரூபாய் 2.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட புதிய 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டூ இன்ஜினை பெறுகின்றது.
அடிப்படையில் ஸ்கிராம் 411 போல பல்வேறு டிசைன் அம்சங்கள் மற்றும் தோற்றமைப்பு உட்பட மெக்கானிக்கல் பாகங்கள் என பெரும்பாலும் முந்தைய மாடலில் இருந்து பகிர்ந்து கொண்டாலும் கூட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள புதிய 440 சிசி என்ஜின் அதிகபட்சமாக கூடுதல் பவர் மற்றும் பார்க்கினை வெளிப்படுத்துகின்றது. மேலும் தற்பொழுது 6 ஸ்பீடு ஆனது கொடுக்கப்பட்டு 443cc அதிகபட்சமாக 25.4hp பவரை 6,250rpm-லும், 34Nm டார்க் 4,000rpmல் வழங்குகின்றது.
புதிய ஸ்கிராம் 440ல் 19 அங்குல முன் சக்கரம் மற்றும் 17 அங்குல பின்புற சக்கரத்த்தை பெற்று அலாய் வீல் உடன் டியூப்லெஸ் டயர் அல்லது ஸ்போக் வீல் உடன் ட்யப் டயர் என இரு வேரியண்டடை பெற்றுள்ளது. புதிய மாடலின் எடை 187 கிலோ பெற்று முந்தைய ஸ்க்ராம் 411 பைக்கினை விட 2 கிலோ அதிகரித்துள்ளது.
RE Scram 440 Force Blue, Teal, Grey – ₹ 2,08,000
RE Scram 440 Trial Blue, Green – ₹ 2,15,000
(Ex-showroom)