தண்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக வரவுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மாடலில் புதிய என்ஜின் பெற்றிருப்பதுடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நவீன தலைமுறையினருக்கு ஏற்ற புதிய வசதிகள் மற்றும் மூன்று விதமான வேரியண்ட் பெற்றிருக்கின்றது.
ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.
மீட்டியோர் 350 ஃபயர்பால் : தொடக்கநிலை ஃபயர்பால் வேரியண்டில் அடிப்படையான வசதிகளில் டிரிப்பர் நேவிகேஷன், ஒற்றை நிறம் பெற்ற டேங்க், கருமை நிற பாகங்கள், பாடி கிராபிக்ஸ் உடன் டிகெல்ஸ், கருமை நிற என்ஜின் உடன் மெசின்டு ஃபின்ஸ் பெற்றுள்ளது.
மீட்டியோர் 350 ஸ்டெல்லர் : நடுநிலையாக நிறுத்தப்பட உள்ள ஸ்டெல்லரில் டிரிப்பர் நேவிகேஷன், பாடி கலரில் மற்ற பாகங்கள், குரோம் பூச்சு பெற்ற புகைப்போக்கி, இஎஃப்ஐ கவர், ஹேண்டில் பார், பின்புற பேக் ரெஸ்ட், பிரீமியம் பேட்ஜிங் போன்றவற்றை கொண்டிருக்கும்.
மீட்டியோர் 350 சூப்பர் நோவா : டாப் மாடலாக விளங்க உள்ள சூப்பர்நோவாவில் இரு வண்ண நிறங்கள், டிரிப்பர் நேவிகேஷன், மெசின்டு வீல்ஸ், வீண்ட் ஸ்கீரின், குரோம் இன்டிகேட்டர்ஸ், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும்.
ஃபயர்பால் மஞ்சள், ஃபயர்பால் சிவப்பு, ஸ்டெல்லர் ரெட் மெட்டாலிக், ஸ்டெல்லர் பிளாக் மேட், ஸ்டெல்லர் ப்ளூ மெட்டாலிக், சூப்பர்நோவா பிரவுன் டூயல்-டோன் மற்றும் சூப்பர்நோவா ப்ளூ டூயல்-டோன் என மொத்தமாக 7 நிறங்கள் மீட்டியோரில் இடம்பெற உள்ளது.
புதிதாக பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டு முந்தைய யூசிஇ என்ஜினின் தொழில்நுட்பத்துக்கு விடைகொடுத்து விட்டு புதிய ஓவர் ஹெட் கேம் செட்டப் பெற்ற 350சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். வரும் செப்டம்பர் மாத மத்தியில் ஆர்இ மீட்டியோர் 350 விற்பனைக்கு ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் விலைக்குள் அமையலாம்.