முந்தைய தண்டர்பேர்டு 350 மாடலின் மேம்பட்ட புதிய மாடலாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 என்ற பெயரில் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. புத்தம் புதிய பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மீட்டியோரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள க்ரூஸர் ரக மீட்டியோரின் 350 மாடலில் இனம்பெற உள்ள புத்தம் புதிய லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது. முந்தைய பிஎஸ்-6 யூசிஇ 350 என்ஜின் பவர் 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தி வருகின்றது.
முந்தைய புஸ் ராடு நுட்பமா (Push Rod) அல்லது SOHC நுட்பம் பயன்படுத்தப்படுகின்றதா என்பதனை பற்றி எந்த தெளிவான தகவலும் கிடைக்க வில்லை. ஆனால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு உரித்தான தம்ப் தொடர்ந்து பெற்றிருக்கும் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்நிறுவனம் புதிய கியர்பாக்ஸ் (அனேகமாக தொடர்ந்து 5 ஸ்பீடு) நவீனத்துமான மேம்பாடுகளை பெற்றதாகவும், இலகுவாக கிளட்ச் இயக்கும் திறன் பெற்றதாக விளங்கும் என தெரிவித்துள்ளது.
மீட்டியோரில் ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.
வரும் செப்டம்பர் இறுதியில் ஆர்இ மீட்டியோர் 350 விற்பனைக்கு ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் விலைக்குள் அமையலாம்.
source – riderlal/youtube