ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு “Make it Yours” (MiY) என்ற சிறப்பு கஸ்டமைஸ் வசதிகளை மேற்கொள்ள முப்பரிமாண கான்ஃபிகுரேட்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் இன்டர்செப்டார் மற்றும் கான்டினெனெடினல் ஜிடி போன்ற மாடல்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வசதி நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள 320 டீலர்களில் இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடல்களை டெலிவரி வழங்க உள்ளது. படிப்படியாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள மீட்டியோர் 350 உட்பட பல்வேறு மாடல்களை 3டி கான்ஃபிகுரேட்டர் வாயிலாக கொண்டு வரவுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஆப் அல்லது இணையதளம் வாயிலாக கஸ்டமைஸ் செய்துகொள்ள பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கஸ்டமைஸ் முறைகளை தேர்ந்தெடுத்தப் பின்னர் 24-48 மணி நேரத்தில் ராயல் என்ஃபீல்டு சென்னை ஆலையில் பைக்கிற்கான கஸ்டமைஸ் வசதிகள் சேர்க்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் ஆப் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் மோட்டார் சைக்கிளை சர்வீஸ் முன்பதிவு செய்வதற்கும் கோரிக்கையை வைப்பதற்கும் தவிர, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் வருடாந்திர பராமரிப்பு தொகுப்புகளையும் தேர்வு செய்யலாம்.