விற்பனையில் உள்ள இன்டர்செப்டார் அடிப்படையில் 650 சிசி என்ஜின் கொண்டு புதிய ஸ்கிராம்பலர் வகை மாடலை அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில் அது தொடர்பான பியர் 650 (Interceptor Bear 650) டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் EICMA 2024 அரங்கில் நவம்பர் 5 ஆம் தேதி விற்பனைக்கு விலை அறிவிக்கப்பட உள்ளது.
இது பீர் மதுபானம் அல்ல கரடி ???? (Bear) ஆகும்
அடிப்படையான எஞ்சினில் மாற்றம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் புகைப்போக்கி இரண்டுக்கு பதிலாக ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டு ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரண்டு சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான டயர் மற்றும் அதற்கு ஏற்ற வகையிலான சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
முன்பே பைக்கின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு விபரங்கள் வெளியான நிலையில் தற்பொழுது டீசரில் Bear இருப்பதைப் போன்ற ஒரு லோகோவின் இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது மேலும் முன்புறத்தில் தங்க நிறத்திலான அப்சைட் டவுன் ஃபோர்க் உள்ளது.
முன்பக்கத்தில் 19 அங்குல டயர் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல டயர் உள்ளது. இருக்கையின் அமைப்பில் மாற்றமும், பிரேக்கிங் போன்றவற்றில் சிறப்பான வகையில் அமைந்திருக்கலாம்.
EICMA அரங்கில் நவம்பர் 4ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளப்பட நிலையில் இன்டர்செப்டார் பியர் 650 உடன் புதிய ஹண்டர் 350, கிளாசிக் 650, புல்லட் 650, ஹிமாலயன் 450 ரேலி எடிசன் ஆகியவை வெளியாகலாம்,