உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் பைக் ரூ.2.50 லட்சம் விற்பனையக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முழுமையான விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
1965 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 750 பைக் உந்துதலை பின்னணியாக கொண்டு பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்டர்செப்டார் 650 பேரலல் ட்வீன் எஞ்சின் பெற்றதாக நெடுஞ்சாலைகளின் அரசனாக இன்ட்ர்செப்டார் 650 க்ரூஸர் விளங்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
டிசைன்
இந்தியாவின் ராயல் என்ஃபீல்டு குழு மற்றும் இங்கிலாந்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு யூகே டெக்னிக்கல் சென்டர் மற்றும் ஹாரிஸ் பெர்ஃபாமென்ஸ் ஆகிய மையங்களின் கூட்டணியில் எஞ்சின் மற்றும் பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
1960-களில் விற்பனை செய்யப்பட்ட இன்டர்செப்டார் மார்க் I தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு வட்ட வடிவ ஹெட்லைட்டை பெற்றதாக ஒற்றை இருக்கை அமைப்புடன், நேர்த்தியான எரிபொருள் டேங்க் அமைப்புடன் எளிமையான காட்சி அமைப்பில் என்ஃபீல்டின் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் மாடலாக இன்டர்செப்டார் ஐஎன்டி 650 ட்வீன் விளங்குகின்றது.
என்ஜின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள பேட்ஜ் உட்பட பெரும்பாலான அம்சங்கள் பாரம்பரியத்தை தொடர்ந்து நினைவுப்படுத்துகின்றது. பெட்ரோல் டேங்கில் அமைந்துள்ள பேட்ஜ் 1965 களில் கிடைத்த இன்டர்செப்டாரின் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது.
சக்கரங்களில் தொடர்ந்து இன்டர்செப்டாரில் வயர் ஸ்போக் கொண்டிருப்பதுடன் இரட்டை பிரிவினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் ஆரஞ்சு க்ரக்ஸ், ரெவிசிங் ரெட் மற்றும் சில்வர் ஸ்பெக்டர் ஆகிய மூன்று நிறுவனங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.
ட்வீன் எஞ்சின்
இ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் வெளியிடப்பட்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரண்டிலும் புத்தம் புதிய 648 சிசி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
வகை | 648 cc, SOHC, air-cooled, parallel-twin |
---|---|
பவர் | 47 bhp at 7,100 rpm |
டார்க் | 52 Nm at 4,000 rpm |
Bore x Stroke | 78 mm x 67.8 mm |
Compression Ratio | 9.5:1 |
கியர்பாக்ஸ் | 6 வேக மேனுவல் |
எரிபொருள் வகை | ப்யூவல் இன்ஜெக்ஷன் |
இக்னிஷன் | டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI |
நுட்ப விபரம்
என்ஜினை தொடர்ந்து இன்டர்செப்டார் 650 பைக்கில் உள்ள மற்ற வசதிகளை காணலாம், முன்புறத்தில் 110 மிமீ பயணிக்கும் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 88 மிமீ பயணிக்கும் ட்வீன் கேஸ் சார்ஜ்டு காயில் ஸ்பிரிங் சுற்றப்பட்ட ஷாக் அப்சார்பரினை பெற்று 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
முன்jபுறத்தில் டயர் 100/90-18 மற்றும் பின்புறத்தில் டயர் 130/70-18 சக்கரங்களில் 18 அங்குல ஸ்போக் வீலுடன், இரட்டை பிரிவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவினை வழங்கும் காட்டும் கருவி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.
எரிபொருள் இல்லாமல் 202 கிலோ கிராம் எடை கொண்டுள்ள இன்டர்செப்டார் 650 மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 804 மீமீ இருக்கை உயரம் பெற்றுள்ளதால் சற்று உயரம் குறைவானவர்களும் மோட்டார்சைக்கிளை கையாளுவதற்கு எளிமையாக அமைந்திருக்கும்.
ரெட்ரோ க்ரூஸர் பைக் மாடலாக விளங்கும் இன்டர்செப்டார் நுட்ப விபர பட்டியலை கீழே காணலாம்.
நுட்ப விபரம் | இன்டர்செப்டார் 650 |
முன்புற சஸ்பென்சன் | 41 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்புற சஸ்பென்சன் | ட்வீன் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர் |
முன்புற பிரேக் | 320 mm டிஸ்க் உடன் ஏபிஎஸ் |
பின்புற பிரேக் | 240 mm டிஸ்க் உடன் ஏபிஎஸ் |
எடை | 202 Kg, (எரிபொருள் இல்லாமல்) |
எடை தாங்கும் திறன் | 200 Kg |
எரிபொருள் கலன் | 13.7 லிட்டர் |
நீலம் | 2122 mm |
அகலம் | 1165 mm |
உயரம் | 789 mm |
கிரவுன்ட் கிளியரன்ஸ் | 174 mm |
இருக்கை உயரம் | 804 mm |
விலை விபரம்
சர்வதேச அளவில் 600சிசி முதல் 750சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலை விட மிகவும் சவாலான விலையில் பாரம்பரியத்தை தொடர்ந்து பெற்ற மாடலாக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் ரூ.2.50 லட்சம் விற்பனையக விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கஸ்டம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2.57 லட்சம்
க்ரோம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2.70 லட்சம்
(இந்திய எக்ஸ்ஷோரூம் விலை)