சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நீண்ட மோட்டார்சைக்கிள் பாரம்பரியமிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், புதிய 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் என அழைக்கப்படுகின்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு மாடல்களுக்கு முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
2017 இ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் வெளியிடப்பட்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரண்டிலும் புத்தம் புதிய 648 சிசி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
வகை | 648 cc, SOHC, air-cooled, parallel-twin |
---|---|
பவர் | 47 bhp at 7,100 rpm |
டார்க் | 52 Nm at 4,000 rpm |
Bore x Stroke | 78 mm x 67.8 mm |
Compression Ratio | 9.5:1 |
கியர்பாக்ஸ் | 6 வேக மேனுவல் |
எரிபொருள் வகை | ப்யூவல் இன்ஜெக்ஷன் |
இக்னிஷன் | டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI |
நாடு முழுவதும் உள்ள என்ஃபீல்ட் டீலர்கள் வாயிலாக ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற 2018 ரைடர் மேனியா அரங்கில் இரு மாடல்களின் விலை விபரம் வெளியாக வாய்ப்புள்ளது.
ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் விலை ரூ. 3.50 லட்சம் (ஆன்ரோடு) அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.