2023 EICMA அரங்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கில் கலை வேலைப்பாடுகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டிசைனர் கிங் நெர்ட் என அழைக்கப்படுகின்ற ஜானி டோவல் தனது டிசைனிங் வேலைப்பாடுகளை இந்த மாடலில் மேற்கொண்டுள்ளார்.
புதிய அழகியல்களை தனது தனித்துவமான பாணியுடன் இணைத்து ஹண்டர் 350 எக்ஸ் பைக்கில் கலைநயத்துடன் வரைந்துள்ளார்.
Royal Enfield Hunter 350 X
பல நூற்றாண்டுகள் பழமையான பைக் தயாரிப்பாளரால் ஆடம்பர மற்றும் உயர்ந்த தரத்திற்கு இணையாக தனது சொந்த உணர்வுகள் தெரு உடைகள், 90களின் ஹிப்-ஹாப் மற்றும் லண்டன் நகரத்தில் இருக்கின்ற பல்வேறு அம்சங்களை கொண்ட வடிவமைப்பினை கொண்டிருக்கின்றது.
ஹண்டர் 350 பைக்கில் 349சிசி ஜே-சீரிஸ் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை எஞ்சின் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.
ரூ.1.50 லட்சத்தில் துவங்குகின்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் இந்நிறுவனத்தின் விலை குறைவான மாடலாகும். மேலும் கிளாசிக் 350 பைக்கினை தொடர்ந்து அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை ஹண்டர் பதிவு செய்து வருகின்றது.