அட்வென்ச்சர் டூரர் ஹிமாலயன் பைக்கின் அடிப்படையில் Scram 411 என்ற பெயரில் குறைந்த பட்ச ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றது.
குறிப்பாக சோதை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஹிமாலயனில் முன்புற வின்ட்ஷீல்டு, ஜெர்ரி கேன் ஹோல்டர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஃபைபரால் தயாரிக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய அளவிலான ஆஃப் ரோடு சாகசத்திற்கு ஏற்ற வகையில் மட்டும் அமைந்திருக்கலாம்.
மற்றபடி கிளஸ்ட்டர் வழக்கம் போலவோ அல்லது டிரிப்பர் நேவிகேஷன் நீக்கப்பட்டு முந்தைய கிளஸ்ட்டர் அமைப்பினை கொடுத்திருக்கலாம். டெயில் பகுதியில் சிறிய அளவில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம்.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.