வரும் 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலக்ட்ரிக் கான்செப்ட் EICMA 2023 மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் இருந்த ஹிமாலயன் 452 பைக்கின் அடிப்படையை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் ஆனது நேரடியாக உற்பத்திக் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
Royal Enfield Himalayan Electric Concept
புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டின் முதல் ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக் கான்செப்டின் தொழில்நுட்பம் சார்ந்த எந்த விபரங்களும் அறிவிக்கப்படவில்லை. HIM-E மாடலை எலக்ட்ரிக் ஹிமாலயன் டெஸ்ட் பெட் என குறிப்பிட்டுள்ளது.
வட்ட வடிவத்தை பெற்ற முழுமையான எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பெட்ரோல் டேங்க் தோற்றமுடைய வகையில் நீட்டிக்கப்பட்ட ஒற்றை இருக்கை கொண்டுள்ளது. டேங்க் போன்ற தோற்றத்தின் அடியில், மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி இடம்பெற்றுள்ளது. கான்செப்ட் முன்புறத்தில் கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க்குகளுடன் பொருத்தப்பட்டு மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற ஷாக் அப்சார்பர் உள்ளது.
இந்த கான்செப்ட் அடிப்படையில் எலக்ட்ரிக் மாடல்களை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் முதல் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.