ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக பைக் மாடலை பிஎஸ்6 என்ஜின் மற்றும் மூன்று புதிய நிறங்களுடன் சில கூடுதல் வசதிகளை பெற்றதாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர்.
கடந்த 2019 இஐசிஎம்ஏ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட மூன்று புதிய நிறங்களான ப்ளூ, கிரே மற்றும் ரெட் ஆகியவற்றுடன் முந்தைய நிறங்களிலும் கிடைக்கலாம். குறிப்பாக பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 410 சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். விற்பனையில் உள்ள மாடலை விட மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்கும் நோக்கில் பிரேக்கிங் அமைப்பின் பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டு, சுவிட்சபிள் ஏபிஎஸ், ஆரம்ப அறிமுகத்தின் போது இடம்பெற்றிருந்த ஹசார்ட் விளக்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு ஹிமலாயன் பைக் மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.6,000 வரை விலை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில், இந்நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பாரத் ஸ்டேஜ் 6 மாடல் வெளியிட்டுள்ளது.
பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விலை பட்டியல்
Himalayan BS-VI – Snow White ரூ.1,86,811
Himalayan BS-VI – Granite Black ரூ.1,86,811
Himalayan BS-VI – Sleet Grey ரூ.1,89,565
Himalayan BS-VI – Gravel Grey ரூ.1,89,565
Himalayan BS-VI – Lake Blue ரூ.1,91,401
Himalayan BS-VI – Rock Red ரூ.1,91,401