வரும் நவம்பர் 1 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் அதிகாரப்பூர்வ படத்தை தனது சமூக ஊடக பக்கங்களில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. முற்றிலும் புதிய 452சிசி லிக்யூடூ கூல்டு என்ஜின் பெற்றதாக வரவுள்ளது.
முந்தைய ஹிமாலயன் 411 வெற்றிய்யை தொடர்ந்து வரவுள்ள புதிய அட்வென்ச்சர் ஹிமாலயன் 450 பைக்கில் 451.65cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
Royal Enfield Himalayan 452
ஹிமாலயன் 452 அட்வென்ச்சர் பைக்கில் 40 hp பவரை வெளிப்படுத்தும் புதிய 451.65 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40-45 Nm வரை டார்க் வெளிப்படுத்தக்கூடும். இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் கொண்டிருக்கலாம்.
ஹிமாலயன் 450 முன்பக்கத்தில் 21 இன்ச் சக்கரமும், பின்புறத்தில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டு பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கும். ஹிமாலயன் 450 இன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ இருக்கலாம். வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று டிஜிட்டல் டேகோமீட்டர் கொண்டு ராயல் என்ஃபீல்டு டிரிப்பர் நேவிகேஷனை பெற உள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ G 310 GS உள்ளிட்ட பிரீமியம் அட்வென்ச்சர் பைக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக் விலை ரூ.2.75 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புகள் உள்ளது.