ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கொரில்லா 450 பைக்கின் டேஸ் வேரியண்டில் கூடுதலாக பிக்ஸ் பிரான்ஸ் நிறத்தை இணைத்துள்ள நிலையில், முன்பாக குறைந்த விலை அனலாக் வேரியண்டில் இடம்பெற்றிருந்த சில்வர் ஸ்மோக் நிறத்தை டேஸ் வேரியண்டிலும் கொண்டு வந்துள்ளது.
நிறங்களை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொரில்லா 450-ல் 8,000rpm-ல் 40.02 ps பவர் மற்றும் 5,500rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
2025 கொரில்லா 450 விலை பட்டியல்
- Analogue Guerrilla ரூ. 2,39,000
- Dash Guerrilla ரூ.2,49,000
- Flash Guerrilla ரூ. 2,54,000
(ex-showroom
மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்ற இந்த மாடலுக்கு முன்பதிவு அனைத்து டீலர்களிடமும் துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி மார்ச் 10 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.