ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 அடிப்படையில் புதிதாக பாபர் ரக ஸ்டைல் மாடல் Goan கிளாசிக் 350 என்ற பெயரில் நவம்பர் 23ஆம் தேதி மோட்டோவெர்ஸ் 2024 அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் பாபர் ரக ஸ்டைல் மாடல்கள் பெரிய அளவிலான வரவேற்பினை பெறவில்லை என்றால் ஏற்கனவே ஜாவா நிறுவனத்தின் பெராக் மற்றும் 42 பாபர் போன்ற மாடல்கள் விற்பனையில் உள்ள நிலையில் இந்த இரு மாடல்களுக்கும் சவாலினை ஏற்படுத்த முடியும் கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையிலான கோன் கிளாசிக் 350 மாடல் U வடிவ சற்று மேல் நோக்கிய ஹேண்டில் பார், வெள்ளை நிறத்துடன் கூடிய டயர், வயர் ஸ்போக்டூ வீல், ஒற்றை இருக்கை ஆப்சன் பெற்றிருந்தாலும் கூடுதலாக இரண்டு இருக்கைகளை இலகுவாக பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
ஜே சீரியஸ் இன்ஜின் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது அடிப்படையில் கிளாசிக் 350, மற்றும் ஹண்டர், மீட்டியோர், புல்லட் 350 போன்றவைகளில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்து கொள்ள உள்ளது. மெக்கானிக்கல் சார்ந்தவற்றிலும் கிளாசிக் 350 பைக்கில் உள்ளதை போன்றே டெலஸ்கோப்பிக் ஃபோர்க் பின்புறத்தில் டிவின் ஷாக் அப்சார்பர் பார் பெற்றிருக்கும்.
கோன் கிளாசிக் 350ல் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்று விலை ரூ. 2.20 லட்சத்தில் துவங்கலாம்.