ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கோன் கிளாசிக் 350 ஆரம்ப விலை ரூபாய் 2.35 லட்சம் முதல் துவங்குகிறது. அடிப்படையில் கிளாசிக் 350 பைக்கினை தழுவியதாக பாபர் ரக ஸ்டைல் மாடலாக பல்வேறு கஷ்டமைஸ் மாற்றங்களை பெற்று மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினர் மற்றும் கஸ்டமைஸ் பிரியர்களுக்கு விரும்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
நான்கு விதமான நிறங்களை பெறுகின்ற இந்த மாடல் ஆனது கலர்ஃபுல்லான பாடி கிராபிக்ஸும் கூடுதலாக சேர்க்கப்பட்டு டாப் வேரியண்டில் சற்று மாறுபட்ட ராயல் என்ஃபீல்டு லோகோ கொடுக்கப்பட்டிருக்கின்றது.
கோன் கிளாசிக் 350 பைக் மாடலிலும் வழக்கமான J-series 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்றாலும் பின்புறத்தில் 16 அங்குல வீலினை பாபர் பைக் பெறுகின்றது.
இந்த மாடலிலும் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்று பிரேக்கிங் அமைப்பில் இரு பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகுடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. இந்த பைக்கின் 90 சதவீத எரிபொருளுடன் 197 கிலோ எடை உள்ளது.
- Shack Black, Purple Haze, Rs 2.35 lakh
- Rave Red, Trip Teal – Rs 2.38 lakh
(ex-showroom chennai)