ராயல் என்ஃபீல்டின் பிளேயிங் பிளே எலெக்ட்ரிக் மூலம் C6 முதல் மாடலாக வரவுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்கிராம்பளர் வகையில் S6 மாடல் டீசராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாடல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வழக்கமான ஃபோர்க்கிற்கு பதிலாக வித்தியாசமான கிரிடெர் ஃபோர்க் பயன்படுத்தப்படும் FF C6 போல அல்லாமல் ஸ்கிராம்பளர் வகையாக வரவுள்ள FF S6 மாடலின் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் ஸ்போக்டூ வீல், செயின் டிரைவ், TFT கிளஸ்டர் உடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் பெற் உள்ளது.
தற்பொழுது வரை பேட்டரி தொடர்பான தகவல்கள் ரேஞ்ச் மற்றும் நுட்ப விபரங்கள் போன்ற எவ்விதமான அடிப்படையான தொழில்நுட்பம் சார்ந்த விபரங்களை ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபிளையிங் ஃபிளே சி6 மாடல் 2025 ஆம் ஆண்டில் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டில் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஸ்கிராப்ளர் வகை மாற்றமானது 2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.