உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் Flying Flea எலெக்ட்ரிக் பைக் இன்றைக்கு EICMA அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த எலக்ட்ரிக் பைக் வடிவம் தொடர்பான காப்புரிமை படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது சோதனையோட்டத்தில் ஈடுபடுகின்ற படமும் வெளியாகி இருக்கின்றது குறிப்பாக வழக்கமாக பயன்படுத்தப்படுகின்ற டெலஸ்கோபிக் மற்றும் அப்சைட் டவுன் ஃபோர்க் பயன்படுத்தப்படாமல் வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) உள்ளது.
மற்றபடி மற்ற என்ஃபீல்டு பைக் களில் உள்ளதை போன்ற வட்ட வடிவ எல்இடி லைட் கிளஸ்டர் போன்றவை பெற்று வழக்கமான டர்ன் இன்டிகேட்டர் விளக்குகளை கொண்டிருக்கின்றது.
கால்களுக்கு பிரேக் லிவர் மற்றும் கிளட்ச் லிவர் எதுவும் கொடுக்கப்படவில்லை, அதற்கு பதிலாக மாற்ற எலெக்ட்ரிக் பைக் போலவே சிங்கிள் ஸ்பீடு மோட்டார் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
தற்பொழுது உரை இந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்து எவ்விதமான நுட்ப விபரங்களான மோட்டார், பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ரேஞ்ச் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை நிலையில் பொதுவாக இது ஆரம்பநிலை மாடல் என்பதனால் 100 முதல் 150 கிலோமீட்டர் ரேஞ்ச் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட டீசர்களில் வானில் உள்ள பாராசூட்டில் இருந்து இறங்குவது போலவே வெளியிட்டு வந்திருக்கின்றது எனவே வருகின்ற மாடலின் பெயர் அனேகமாக ஃப்ளையிங் பிளே எலெக்ட்ரிக் பைக் என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைக்கு EICMA 2024 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள எலெக்ட்ரிக் பைக் இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு வெளியாக உள்ளது.