ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஃபிளையிங் ஃபிளே (Flying Flea) எலெகட்ரிக் பிராண்டின் கீழ் முதல் C6 என்ற பெயரில் துவக்க நிலை சந்தைக்கு நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் நுட்பவிபரம் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எலெகட்ரிக் வாகனத்தின் அறிமுகத்தின் பேசிய ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார்த் லால் பேசுகையில், எலெக்ட்ரிக் டூ வீலர்கள் குறிப்பிட்ட அளவிலான மிக குறைந்த ரேஞ்ச் மட்டும் வெளிப்படுத்தும் சந்தைக்கு ஏற்ப மட்டுமே தயாரிக்க முடியும், மற்றபடி, நீண்ட தொலைவுக்கு சாத்தியமில்லை அல்லது குறிப்பிட்ட தொலைவுக்கு ஒருமுறை சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். எனவே, தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ICE மாடல்களை தயாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
C6 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலின் ஃபிரேம் ஃபோர்ஜ்டூ அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, முன்புறத்தில் கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) உள்ளது. எல்இடி லைட்டிங்கையும் மற்றும் இலகுவான எடையை வழங்கும் magnesium கொண்டு நேர்த்தியான பேட்டரி பேக் மூடப்பட்டுள்ள கவரில் மிக கவர்ச்சிகரமான கூலிங் ஃபின் ஆனது வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக பில்லியன் இருக்கை பொருத்துவதற்கான வசதிகள் உள்ளது.
புளூடூத் வழியாக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் டச்ஸ்கிரீன் TFT கிளஸ்ட்டர் உடன் இணைக்க முடியும். ஃபிளையிங் ஃபிளே C6 மாடலில் டிராக்ஷன் கட்டுப்பாட்டு உடன் கார்னரிங் ஏபிஎஸ் வசதியையும் கொண்டடிருக்கும்.
வரும் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு எலெகட்ரிக் பிரிவின் கீழ் Flying Flea C6 விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதுதவிர இந்நிறுவனம் எலெகட்ரிக் ஸ்கிராம்பளர் S6 மாடலையும் தயாரித்து வருகின்றது.