நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் முதன்மையான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் முதல் எலெக்ட்ரிக் பைக் ஆரம்பகட்ட தயாரிப்பு நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு 2.0 உத்தியில் பல்வேறு புதிய மேம்பட்ட மாடல்கள் உட்பட அட்வென்ச்சர், கஃபே ரேசர் உட்பட மேலும் பல மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் தனது மின்சார புல்லட் மாடலை உருவாக்க உள்ளது.
ராயல் என்ஃபீல்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி வினோத் தசாரி கூறுகையில், வரவிருக்கும் புதிய தயாரிப்புகளை கருத்தில் கொண்டு நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற இயலும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகெங்கிலும் பல சிறிய அசெம்பிளி ஆலைகளை உருவாக்கவும், புதிய கட்டிடங்கள், புதிய தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளும் அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டின் தொழில்நுட்ப மையத்தில் புதிய மின்சார பைக் தயாரிப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்பீல்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் அடுத்த ஆண்டு இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிங்க – பிஎஸ் 6 நடைமுறையில் 500சிசி பைக்குகளை நீக்கும் ராயல் என்ஃபீல்ட்
உதவி – economic times