ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்பளர் பியர் 650 மற்றும் கிளாசிக் 650 என இரண்டு மாடல்கள் என்று அறிமுகம் செய்யப்பட உள்ளது நிலையில் கூடுதலாக ஹிமாலயன் 450 ராலி மாடலும் அறிமுகம் செய்யப்படுகின்றது.
ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஃபிளையிங் ஃபிளே பிராண்டில் C6 மற்றும் ஸ்கிராம்பளர் S6 என இரண்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பியர் 650 மாடலின் எஞ்சின் விபரம் மற்றும் விலை பட்டியல் அமெரிக்கா, கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைக்கு பியரின் இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலின் விலை அறிவிக்கப்பட உள்ளது.
இரண்டு புகைப்போக்கிகளுக்கு பதிலாக ஒற்றை புகைப்போக்கி கொடுக்கப்பட்ட காரணத்தால் டார்க் உயர்ந்துள்ளது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள கிளாசிக் 350 மாடலை போலவே கிளாசிக் 650 பைக்கிற்கான எஞ்சின் மற்ற 650சிசி பைக்குகளில் உள்ளதை போன்றே இரண்டு புகைப்போக்கியுடன் வரவுள்ளது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாற்றத்தை பெற்ற மாடல் ரேலி எடிசன் என்ற பெயரில் வெளியாக உள்ளது.