ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பதிப்பு நேற்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் விற்பனையை தொடங்கியது. விற்பனை தொடங்கப்பட்ட 178 செகண்டுகள் அதாவது 3 நிமிடத்தில் விற்பனை நிறைவு பெற்றது. உலகளவில் மொத்தமாக ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ், 1000 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அதில் 250 யூனிட்கள் மட்டுமே இந்திய மார்க்கெட்டுக்கு வழங்கப்பட்டது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் விலை 2.40 லட்சம் ரூபாயாகும். (டெல்லியில் ஆன்ரோடு விலை)
சாதனை விற்பனை குறித்து பேசிய ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பெகாசஸ் பதிப்பு, தலைவர் ருத்ரத்சிங் சிங், பெகாசஸ் மோட்டர் சைக்கிள்கள் விற்பனை, ராயல் என்ஃபீல்ட்க்கு உள்ள பெரியளவிலான வரவேற்பை மீண்டும் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. எதிர்பார்த்ததை விட விரைவாக 250 மோட்டார் சைக்கிள்கள் 178 செகண்டுகளில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என்றார்.
இரண்டாம் உலக போரின் போது பிரிட்டன் ராணுவத்தில் சேவை புரிந்த ஒரிஜினல் பிளேயிங் பிளா மோட்டார் சைக்கிளின் நினைவாகவும், பிரிட்டன் ராணுவத்தில் உள்ள பாரசூட் பிரிவுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பதிப்பு உருவாக்கப் பட்டது.
பெகாசஸ் பதிப்புகள் 499CC சிங்கிள் சிலிண்டர், எரிபொருள் இன்ஜெக்டட் இஞ்சின், 27.2 bhp ஆற்றல் மற்றும் 41.3 Nm உச்சபட்ச டார்க்கை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த பைக்கில் 5-ஸ்பீட் கியர்பாக்சும் இணைக்கப்பட்டுள்ளது.
தனித்துவமிக்க இந்த பெகாசஸ் பதிப்புகளை சாலையில் காண்பது அரிதாகவே இருக்கும். ஆனால், ஸ்டாண்டர்ட் கிளாசிக் 500 பைக்களை அதிகளவில் சாலைகளில் காணலாம். இந்த பைக்குகளை நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராயல் என்ஃபீல்ட் டீலர்களை தொடர்பு கொண்டு விலைக்கு வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.