ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 மோட்டார் சைக்கிள்கள் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்பட்டு வருவது, தற்போது வெளியாகியுள்ள செய்திகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ABS மோட்டார் சைக்கிள் 2.10 லட்சம் விலையில் (எக்ஸ்ஷோ ரூம் விலை மும்பையில்) விற்பனைக்கு வந்துள்ளது. இது ஸ்டாண்டர்ட் வெர்சன் மோட்டார் சைக்கிள் விலையை விட 30 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். இந்த விலைகள் மோட்டார் சைக்கிளின் கலரை பொறுத்து வேறுபடும் என்று தெரிய வந்துள்ளது. ABS வசதி, ஸ்டீல்த் பிளாக் மற்றும் டெஸெர்ட் ஸ்டார்ம் என இரண்டு கலர் ஆப்சன்களில் வெளி வந்துள்ளது. தற்போது ராயல் என்பீல்ட் டீலர்கள், மற்ற வெர்சன்கள் இந்த வசதியை எதிர்காலத்தில் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 சிக்னல் எடிசன், ABS வசதியுடன் வெளியாகிறது என்ற தகவல் வெளியான ஒரு வாரத்திலேயே நிறுவனத்தின் புதிய தகவலாக இந்தியாவில் வெளியாகும் முதல் ABS வசதி கொண்ட மோட்டார் சைக்கிள் என்ற தகவலும் வெளியானது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 மோட்டார் சைக்கிள்கள், டூயல்-சேனல் ABS யூனிட்டை கொண்டுள்ளது. இது, ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் சிக்னல்ஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் போன்றே இருக்கும்.
விலையை ஒப்பிடும் போது, கிளாசிக் 500 மோட்டார் சைக்கிளின் விலை, ஹிமாலயன் மோட்டார் சைக்கிள்களின் பிரிமியம் எடிசன் விலையை விட 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இது ஸ்டாண்டர்ட் வெர்சனை விட அதிகமாகும். இருந்த போதிலும், தற்போது விற்பனைக்கு வந்துள்ள மோட்டார் சைக்கிளில் இடம் பெற்றுள்ள வசதிகள் நீண்ட காலமாக காத்திருப்புக்கு பின்னர். நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் ஏற்கனவே சர்வதேச எடிசன் மோட்டார் சைக்கிள்களில் இடம் பெற்றிருந்தது.
ABS வசதியை தவிர்த்து, கிளாசிக் 500- மோட்டார் சைக்கிள்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 499cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, எரிபொருள்-இன்ஜெக்டாட் இன்ஜின்களை கொண்டுள்ளது, இந்த இன்ஜின்கள் 27bhp மற்றும் 41Nm உச்சபட்ச டார்க்யூ-வை கொண்டிருக்கும். இதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிள்கள் 5-speet டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் அனைத்து வகை மோட்டார் சைக்கிள்களும் அடுத்த சில மாதங்களில் ABS வசதி பெறும் என்று தெரிவித்துள்ள நிறுவனம், நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இண்டெர்ஸ்ப்ட்டோர் மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேற்குறிய இரண்டு மாடல்களும் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாடல்களாகும். ராயல் என்பீல்ட் 650 டூவின்களின் சர்வதேச அறிமுகம் இந்த மாதத்தின் இறுதியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.