ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது பிரபலமான கிளாசிக் 350 மாடலுக்கு பிரத்தியேக ஆக்செரீஸ்களை கொண்டு வாங்குவோரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ஆப்ஷனை ஆன்லைன் கான்ஃபிகுரேட்டரை வெளியிட்டுள்ளது.
விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஆக்செரீஸ்களை அனைத்தும் என்ஃபீல்டு தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு நேரடியாக டீலர்களின் வாயிலாக டெலிவரி செய்யப்பட உள்ளது. கிளாசிக் 350 மாடலுக்கு மட்டும் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, ராயல் என்ஃபீல்டு இதை ‘உங்கள் சொந்தமாக்கு’ முயற்சி என்று அழைக்கிறது. மேலும் சென்னை, டெல்லி என்.சி.ஆர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை மற்றும் புனே ஆகிய 6 நகரங்களில் 141 டீலர்களில் மட்டும் முதற்கட்டமாக வெளியிடுகிறது.
மற்ற நகரங்கள் டீலர்களுக்கு படிப்படியாக விரிவுப்படுத்த வாய்ப்புள்ளது. ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் பன்னியர்ஸ், புகைப்போக்கி, டூரிங் இருக்கை விருப்பங்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்ற பல பாகங்கள் மூலம் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது.
முதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு அனுமதித்துள்ள நிலையில் மற்ற மாடல்களுக்கு விரைவில் இந்த ஆப்ஷனை செயற்படுத்த வாய்ப்புள்ளது.