Categories: Bike News

புதிய நிறங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 வெளியானது

03d1f 2020 royal enfield classic 350 metallo silver

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான கிளாசிக் 350 மாடலில் மெட்டாலோ சில்வர் மற்றும் ஆரஞ்சு எம்பெர் என இரண்டு நிறங்களை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ் ஆப்ஷன் Make it Yours (MiY) மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் முதன்மையான மாடலாக விளங்குகின்ற கிளாசிக் 350 பைக்கில் முன்பே இந்நிறுவனம் பல்வேறு கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வழங்கி வருகின்றது. முன்பாக 650 ட்வின்ஸ், புதிய மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் போன்றவைக்கு Make it Yours (MiY) திட்டத்தில் வழங்கி வருகின்றது.

கிளாசிக் EFi 350 மாடலின் அதிகபட்சமாக 19.1hp பவர் மற்றும் 28Nm டார்க் வெளிப்படுத்தக்கூடும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு புதிய நிறங்களின் விலை ரூ.1.86 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

 

Share
Published by
MR.Durai