உலகின் முதன்மையான நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் அனைத்து வேரியண்டுகளின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
பிரசத்தி பெற்ற கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட் 350, புல்லட் 350 ES, ஹிமாலயன், ஸ்கிராம் 411, மீட்டியோர் 350, சூப்பர் மீட்டியோர் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என 10 மாடல்களின் என்ஜின், மைலேஜ், மற்றும் சிறப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதானது, எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.
2023 Royal Enfield Bullet
1932 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வருகின்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளில் கிக் ஸ்டார்ட் மட்டும் வழங்கப்பட்டு, இந்நிறுவனத்தின் பாரம்பரிய லோகோவை பெற்று கருப்பு நிறத்தில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.
Royal Enfield Bullet | |
என்ஜின் (CC) | 346 cc |
குதிரைத்திறன் | 19.1 bhp @ 5200 rpm |
டார்க் | 28 Nm @ 4000 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 38 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,84,424 ஆகும்.
2023 Royal Enfield Bullet ES
புல்லட் பைக்கினை அடிப்படையாக கொண்டு கூடுதலாக எலக்ட்ரிக் ஸ்டார்டர் பெற்ற புல்லட் ES மாடலிலும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் லாங் ஸ்ட்ரோக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் ப்ளூ என மூன்று நிறங்களை கொடுத்துள்ளது.
Royal Enfield Bullet | |
என்ஜின் (CC) | 346 cc |
குதிரைத்திறன் | 19.1 bhp @ 5200 rpm |
டார்க் | 28 Nm @ 4000 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 37 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் ES பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,93,999 ஆகும்.
2023 Royal Enfield Classic 350
அதிகம் விற்பனையாகின்ற பிரசத்தி பெற்ற கிளாச்சிக் 350 பைக்கில் சிங்கள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமாக கிடைக்கின்றது. தொடர்ந்து இந்த பைக்கிலும் 349சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு மொத்தமாக 12 நிறங்களை பெற்றுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற கிளாசிக் பைக்கில் ஸ்போக் வீல் பெற்று ரெட்டிச் அடிப்படையில் க்ரீன், கிரே மற்றும் ரெட் நிறங்கள் உள்ளன. அலாய் வீல் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற வேரியண்டில் மட்டும் உள்ளது.
Royal Enfield Classic 350 | |
என்ஜின் (CC) | 349 cc |
குதிரைத்திறன் (bhp @ rpm) | 20.2 BHP @ 6100 rpm |
டார்க் (Nm @ rpm) | 27 Nm @ 4000 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 35 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 2,20,001 முதல் ₹ 2,54,751 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Hunter 350
சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பினை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கில் மிக நேர்த்தியான இளைய தலைமுறையினரை கவரும்ம் வகையிலான வடிவமைப்பினை பெற்றுள்ளது. ரெட்ரோ மற்றும் மெட்ரோ டேப்பர், மெட்ரோ ரீபெல் என இரு விதமான வேரியண்டில் மொத்தமாக 8 நிறங்களை கொண்டுள்ளது.
Royal Enfield Hunter 350 | |
என்ஜின் (CC) | 349 cc |
குதிரைத்திறன் | 20.2 bhp @ 6100 rpm |
டார்க் | 27 Nm @ 4000 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 36 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 1,73,801 முதல் ₹ 2,00,190 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Himalayan
அட்வென்ச்சர் ஸ்டைலை பெற்ற ஆஃப்ரோடு சாகசத்துக்கு ஏற்ற 2023 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் 411சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 220 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 6 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
Royal Enfield Himalayan | |
என்ஜின் (CC) | 411 cc |
குதிரைத்திறன் | 24.3 bhp @ 6500 rpm |
டார்க் | 32 Nm @ 4000- 4500 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 31 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 2,54,349 முதல் ₹ 2,68,186 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Scram 411
ஹிமாலயன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக் 24.3 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றது. 7 விதமான நிறங்களில் கிடைக்கின்ற ஸ்கிராம் மாடலில் ஒற்றை இருக்கை பெற்று 19 அங்குல முன்புற வீல் கொண்டுள்ளது. ஆனால் ஹிமாலயன் 21 அங்குல வீல் பெற்றுள்ளது.
Royal Enfield Scram 411 | |
என்ஜின் (CC) | 411 cc |
குதிரைத்திறன் | 24.3 bhp @ 6500 rpm |
டார்க் | 32 Nm @ 4000- 4500 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 32 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 2,43,993 முதல் ₹ 2,50,083 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Meteor 350
க்ரூஸர் ரக ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் ஃபயர்பால் , ஸ்டெல்லர் மற்றும் சூப்பர் நோவா என மூன்று விதமான வேரியண்டில் 11 விதமான நிறங்களை கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.
Royal Enfield Meteor 350 | |
என்ஜின் (CC) | 349 cc |
குதிரைத்திறன் | 20.2 bhp @ 6100 rpm |
டார்க் | 27 Nm @ 4000 rpm |
கியர்பாக்ஸ் | 5 Speed |
மைலேஜ் | 34 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 2,32,593 முதல் ₹ 2,55,599 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Super Meteor 650
மீட்டியோர் 350 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 2023 ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் ஆஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர், மற்றும் டூரர் என மூன்று விதமான வேரியண்டில் 7 விதமான நிறங்களை கொண்டுள்ளது.
Royal Enfield Super Meteor 350 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 21 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,05,257 முதல் ₹ 4,38,412 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Interceptor 650
கிளாசிக் ஸ்டைலை பெற்ற மாடலாக விளங்கும் 2023 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் 7 விதமான நிறங்களை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பான வரவேற்பினை பெற்றதாக அமைந்துள்ளது.
Royal Enfield Interceptor 650 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 21 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,49,243 முதல் ₹ 3,79,478 வரை மாறுபடும்.
2023 Royal Enfield Continental GT
கஃபே ரேசர் ஸ்டைலை பெற்ற கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கினை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 648சிசி என்ஜினை பொருத்தி விற்பனை செய்கின்றது. இந்த பைக்கில் 6 விதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
Royal Enfield Continental GT | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 21 Kmpl |
2023 ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,66,675 முதல் ₹ 3,95,000 வரை மாறுபடும்.
last price updated – 29/05/2023