சர்வதேச அளவில் 250-750சிசி பிரிவில் முதன்மையான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 650சிசி பைக்குகளான கிளாஸிக் 650, பியர் 650, சூப்பர் மீட்டியோர் , கான்டினென்டினல் ஜிடி, இன்டர்செப்டார் மற்றும் ஷாட்கன் ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ், மற்றும் சிறப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
தற்பொழுது 650சிசி பைக்குகளில் 6 மாடல்களின் மூலம் 97 % சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கூடுதலாக பல்வேறு மாடல்களை அடுத்தடுத்து புதிய மாடல்களை வெளியிட திட்டமிடுள்ளது.
2025 Royal Enfield Classic 650
கிளாசிக் 350 மாடலை தழுவியதாகவும், முந்தைய கிளாசிக் 500 இடத்தை நிரப்புவதற்காக வந்துள்ள கிளாஸிக் 650 பைக்கிலும் 650சிசி எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற நிலையில், கிளாசிக் பைக்கிற்கு உரித்தான பல்வேறு டிசைன் அம்சங்களை பெற்றதாக 4 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
Royal Enfield Classic 650 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 22-25 Kmpl |
2025 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,99,499 முதல் ₹ 4,14,500 வரை மாறுபடுகின்றது.
- Hotrod Bruntingthorpe Blue, Vallam Red – ₹ 3,99,499
- Classic Teal – ₹ 4,04,500
- Black Chrome – ₹ 4,14,500
2025 Royal Enfield Bear 650
இன்டர்செப்டார் 650ல் பெறப்பட்டுள்ள புதிய ஸ்கிராம்பளர் ரக பியர் 650 பைக்கிலும் 650சிசி எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும் மிகப்பெரிய வித்தியாசம் மற்ற 650 போல அல்லாமல் ஒற்றை எக்ஸ்ஹாஸ்ட் முறையாக மாற்றப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
Royal Enfield Bear 650 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7150 rpm |
டார்க் | 56.5 Nm @ 5150 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 22-25 Kmpl |
2025 ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,02,769 முதல் ₹ 4,25,565 வரை மாறுபடுகின்றது.
- Broadwalk White – ₹ 4,02,765
- Petrol Green, Wild Honey – ₹ 4,08,542
- Golden Shadow – ₹ 4,16,089
- Two Four Nine – ₹ 4,25,565
2025 Royal Enfield Shotgun 650
கஸ்டமைஸ்டு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் விருபத்தை நிறைவேற்றும் வகையில் பாபர் ரக ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 பைக் மாடலில் பேரலல் ட்வீன் 648சிசி என்ஜினை பெற்றதாக அமைந்துள்ளது.
ஸ்டென்சில் வெள்ளை, பிளாஸ்மா நீலம், பச்சை டிரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்கு நிறங்களை கொண்டுள்ள ஷாட்கன்னில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
Royal Enfield ShotGun 650 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 22-25 Kmpl |
2025 ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,26,432 முதல் ₹ 4,42,510 வரை மாறுபடுகின்றது.
- RE Shotgun 650 Sheetmetal Grey – INR 4,26,432
- RE Shotgun 650 Plasma Blue – INR 4,38,543
- RE Shotgun 650 Stencil White, Drill Green – INR 4,42,510
202 Royal Enfield Super Meteor 650
650சிசி சந்தையில் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் தொடர்ந்து நல்ல வற்வேற்பினை இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெற்று விளங்குகின்ற மோட்டார்சைக்கிளில் 648சிசி என்ஜின் உள்ளது. ஆஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர், மற்றும் டூரர் என மூன்று விதமான வேரியண்டில் 7 விதமான நிறங்களை கொண்டுள்ளது.
Royal Enfield Super Meteor 350 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 24 Kmpl |
202 ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,31,257 முதல் ₹ 4,65,664 வரை மாறுபடும்.
- Astral Black, Blue, Green – INR 4,31,257
- Interstellar Green, Grey – INR 4,48,468
- Tourer Celestial Red, Blue – INR 4,65,664
202 Royal Enfield Interceptor 650
650cc வரிசையில் வந்த முதல் மாடலான 650 ட்வீன்ஸ் இன்டர்செப்டார் பைக்கில் 648சிசி என்ஜின் பெற்று 7 விதமான நிறங்களை கொண்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 164 கிமீ பெற்றதாக அமைந்துள்ளது. மாடர்ன் ரோட்ஸ்டெர் ஸ்டைலை கொண்டுள்ள பைக் மாடல் அமோக வரவேற்பினை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெற்றுள்ளது.
Royal Enfield Interceptor 650 | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 21 Kmpl |
202 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,62,488 முதல் ₹ 3,94,114 வரை மாறுபடும்.
- Interceptor Canyon Red, Call Green – INR 3,62,488
- Interceptor Black Pearl, Sunset Strip – INR 3,71,533
- Interceptor Black Ray, Barcelone Blue – INR 3,82,819
- Interceptor Mark 2 – INR 3,94,114
202 Royal Enfield Continental GT 650
கஃபே ரேஸர் ஸ்டைலை பெற்ற கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கிலும் 648சிசி என்ஜின் பெற்று அதிகபட்சமாக 47 hp பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் இலகுவாக மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டுகின்றது. இந்த பைக்கில் 6 விதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
Royal Enfield Continental GT | |
என்ஜின் (CC) | 648 cc |
குதிரைத்திறன் | 46.53 bhp @ 7250 rpm |
டார்க் | 52.3 Nm @ 5650 rpm |
கியர்பாக்ஸ் | 6 Speed |
மைலேஜ் | 23 Kmpl |
2025 ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,80,560 முதல் ₹ 4,09,128 வரை மாறுபடும்.
- Continental GT 650 British Racing Green, Rocket Red – INR 3,80,560
- Continental GT 650 Dux Deluxe – INR 3,91,985
- Continental GT 650 Apex Grey, SlipStream Blue – INR 4,03,345
- Continental GT 650 Mr Clean – INR 4,09,128
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதானது, எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.
Onroad Price updated Date – 28/03/2025