இந்தியாவின் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்த 650 ட்வின்ஸ் எனப்படுகின்ற இன்டர்செப்டார் 650 , கான்டினென்டினல் ஜிடி 650 ஆகிய மாடல்கள் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய நிறத்தை பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் 650 ட்வின்ஸ்
என்ஃபீல்ட் நிறுவனம் இஐசிஎம்ஏ 2017 கண்காட்சியில் அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 மாடல்களில் புதிதாக தலா ஒரு நிறத்தை இணைத்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கில் இரு பிரிவாக பெட்ரோல் டேங்க் நிறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கிரே நிற கலவையுடன் மஞ்சள் நிற செங்குத்தான கோடு இடம்பெற்றுள்ளது. இன்டர்செப்டார் 650 பைக்கில் வெள்ளை நிற பெட்ரோல் டேங்க் பெற்று டேங்கின் கீழ் பகுதியில் சிவப்பு நிறம் வழங்கப்பட்டு, இரு மாடல்களிலும் ரிம், முன்பக்க ஃபென்டர் மற்றும் சைட் பேனல்கள் கருப்பு நிறத்தை பெற்று விளங்குகின்றது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்றவற்றில் முதற்கட்டமாக விற்பனைக்கு செல்ல உள இரு மாடல்களும் இந்தியாவில் இந்த வருடத்தின் பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி 650 மாடல்கள் விலை ரூ.3.80 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம்.