நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் முதன்மையாக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் எலக்ட்ரிக் பைக் உட்பட 15 முதல் 20 மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டின் “RE 2.0 mid-term plan” அடிப்படையில் வெளியிடப்பட்ட முதல் மாடலான மீட்டியோர் 350 பைக்கினை தொடர்ந்து புல்லட், கிளாசிக் போன்ற மாடல்கள் J பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஜே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்ற மாடல்கள் அடுத்த ஓராண்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ளது.
இதுதவிர இந்நிறுவனம் “Q” மற்றும் “K” என இரண்டு புதிய பிளாட்ஃபாரத்தில் எலக்ட்ரிக் பைக் உட்பட பல்வேறு மாடல்கள் வரவுள்ளது. குறிப்பாக 250-750cc சந்தையில் ஸ்டீரிட், கஃபே ரேசர், அட்வென்ச்சர், மற்றும் கிளாசிக் ஸ்டைல் மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனையில் கிளாசிக் பைக்கின் சந்தை மதிப்பு 85 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைந்து மற்ற பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது.
மாதந்தோறும் மீட்டியோர் பைக்கினை 10,000 யூனிட்டுகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணையித்துள்ளது. அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் புதிய கிளாசிக் 350 வெளியிடப்பட உள்ளது.
தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அக்டோபர் மாதம் இறுதிவரை 80,000 யூனிட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ள நிலையில் 30,000 யூனிட்டுகள் வரை தொழிற்சாலையில் தயார் நிலையில் உள்ளதாக என்ஃபீல்டு சிஇஓ வினோத் தாசாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 உட்பட டிவிஎஸ்-நார்டன், ஹீரோ-ஹார்லி டேவிட்சன் கூட்டணி மற்றும் பஜாஜ்-ட்ரையம்ப் ஆகிய நிறுவனங்களின் புதிய ரெட்ரோ ஸ்டைல் மாடல்கள் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக உள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 20 ரெட்ரோ மாடல்களை திட்டமிட்டுள்ளது.
web title : Royal Enfield 20 new Motorcycles, Including E-Bikes