பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ரிவர் மொபைலிட்டி அறிமுகம் செய்த இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், விரைவில் டெலிவரி வழங்கப்பட உள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் விற்பனைக்கு ரூ.1.25 லட்சத்தில் கிடைக்கின்றது.
River Indie escooter
மாறுபட்ட வடிவமைப்பினை பெற்று சதுர வடிவ இரட்டை எல்இடி ஹெட்லைட், தட்டையான முன்பகுதி மற்றும் நல்ல அகலமான இருக்கை, பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் கொண்டு சிறப்பான கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகின்றது.
ரிவர் இண்டி மின்சார ஸ்கூட்டரில் ஐபி 67-மதிப்பிடப்பட்ட 4 கிலோவாட் பேட்டரி பேக்கை கொண்டு நிஜத்தில் 120 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. முழுமையான சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.
இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7 கிலோவாட் பவர் மற்றும் 26 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. பின்புற சக்கரத்திற்கு பெல்ட் டிரைவ் வழியாக பவர் அனுப்புகிறது. 3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும்.
பேட்டரி மற்றும் ஸ்கூட்டர் இரண்டுக்கும் 5 ஆண்டு அல்லது 50,000 கிமீ உத்தரவாதத்தை கொண்டுள்ளது. Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்றுள்ளது. இரண்டு யூஎஸ்பி போர்ட், கிராஷ் கார்டு, முன்பக்க கால் வைக்க மிதியடி, சைட் ஸ்டாண்ட் கட்-ஆஃப், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் என பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளது.
ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பெங்களூரு அருகே உள்ள ஹோஸ்கோட்டில் புதிதாக துவங்கப்பட்ட ஆலையில் தொடங்கப்பட்டது. பெங்களூரில் அடுத்த மாதம் முதல் இண்டி மின்சார ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கப்படும்.