பழுது நீக்கும் உரிமை (Right to Repair) கொள்கையை இந்திய அரசு அறிவித்துள்ளதால் மூன்றாம் நபரிடம் அவசர தேவைகளுக்காக வாகனத்தின் பழுது நீக்கினாலும் வாரண்டி தொடர்பான அம்சங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
பொதுவாக நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் தயாரிப்பாளர் சில உத்திரவாதங்ளை வழங்குவர். உத்தரவாதத்தின் முழுமையான பலனை பெற அங்கீரிக்கப்பட்ட டீலர்களிடம் மட்டுமே பாரமரிப்பு மேற்கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பழுது நீக்கும் உரிமை கொள்கையின் மூலம் திறன் வாய்ந்த மூன்றாம் நபர்கள் மூலமாகவும் பழுது பாரத்தாலும் வாரண்டியில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் பழுது பார்க்கும் உரிமை (Right to Repair) என்ற அமைப்பினை உருவாக்கி குழுவைக் கூட்டியுள்ளது. உள்ளூர் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் சென்று, கூடுதலான பில் வசூலிப்பது நடக்கும். இதற்கு மாற்றாக வாடிக்கையாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை திறன் மிக்க மூன்றாம் நபரின் பட்டறையில் பாதுகாப்பாக சரிசெய்யலாம்.
வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளைப் பற்றி நுகர்வோருக்கு பழுது நீக்குவது தொடர்பாக தெரிவிக்க வேண்டும். அங்கீரிக்கப்பட்ட டீலர்களை மட்டும் முழுமையாக நம்பாமல் உள்ளூர் மெக்கானிக் மூலம் பழுது நீக்கலாம்.
இதற்காக அரசு பிரத்தியேகமாக இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது. https://righttorepairindia.gov.in
பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு பற்றிய தகவல்கள்:
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா என இரண்டு நிறுவனங்கள் முதற்கட்டமாக அரசாங்க தளத்தில் பதிவு செய்துள்ளன. டிராக்டர் தயாரிப்பாளர் டஃபே மோட்டார்ஸ் இணைந்துள்ளது. மற்ற பைக் தயாரிப்பாளர்களும் இணைய உள்ளனர். வாடிக்கையாளர் பராமரிப்பு தொடர்பு விவரங்கள் அதிகாரப்பூர்வ ரிப்பேர் இணையதளத்தில் ஒன்றாக இணைக்கப்பட உள்ளது.
உத்தரவாதங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் பற்றிய தகவல்
உதிரி பாகங்கள் அல்லது அவற்றின் உற்பத்தியாளர்களை கண்டறிய, இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம். அவர்களின் பொருட்கள், சேவைகள், உத்தரவாதங்கள், விதிமுறைகள் & நிபந்தனைகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் இந்த தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
பிராண்டுகளின் சேவை நெட்வொர்க்குகள் பற்றிய சிறந்த அறிவு
பிராண்டுகளுக்கான மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ சேவை நெட்வொர்க்குகளுக்கான இணைப்புகளை பார்க்கலாம். பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட மற்ற உதிரிபாகங்கள் மற்றும் பாகங்களுக்கான உத்தரவாதம் மற்றும் விலை பற்றிய விவரங்களையும் காணலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த இணையதளத்தில் ஸ்பிளெண்டர்+ , ஜூம் 110 ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S என மூன்று மாடல்களை இணைத்துள்ளது.
ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம், தனது ஆக்டிவா 125, ஹார்னெட் 2.0 மற்றும் CB 200X என மூன்று மாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் வாகனங்களை தவிர, விவசாய உபகரணங்கள், மொபைல், டேப்லெட், லேப்டாப், பேட்டரி மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் போன்ற வாகனம் அல்லாத பிரிவுகளையும் இந்த தளம் பெற்றுள்ளது.