டிவிஎஸ் மோட்டார் கம்பெனி சிறப்பான ரேசிங் திறனை பெற்ற ஆரம்ப நிலை அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி (TVS Apache RTR 165 RP), டிவிஎஸ் ஆர்பி ரேசிங் பெர்ஃபாமென்ஸ் (TVS RP Race Performance) என இரு பெயர்களையும் பயன்படுத்துவதற்காக விண்ணப்பித்துள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 165 RP
முன்பாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஆர்டிஆர் வரிசை மற்றும் ஆர்ஆர் என இரண்டிலும் பிரிமியம் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக பைக்குகளை விள்பனை செய்து வரும் நிலையில் கூடுதலாக ஆர்பி என்ற பெயரை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
RTR – Racing Throttle Respone
RR – Racing Replica
RP – Race Performance
தற்பொழுது அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில் 160, 180 200சிசி மாடல்கள் கிடைத்து வரும் நிலையில் அடுத்ததாக வரவுள்ள மாடலுக்கு 165 என பெயரிட்டுள்ளதால் இந்த மாடலில் கூடுதலான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஆர்பி வரிசையில் அடுத்தடுத்து கூடுதல் சிசி பெற்று என்ஜின் மாடலும் வரக்கூடும்.