ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லினக்ஸ் மற்றும் ஏக்ரோ என இரு டர்ட் பைக் கான்செப்ட் கடந்த முறை EICMA அரங்கில் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது உற்பத்தி நிலை மாடல் நவம்பர் 4ஆம் தேதி EICMA கண்காட்சியில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் ஹீரோ வீடா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர் மூலம் புதிய டர்ட் அட்வென்ச்சர் மாடல்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சுவாரஸ்யமான லினக்ஸ் மாடல் 3kw பேட்டரியுடன் 15kW (20.4hp) பவரை வெளிப்படுத்தலாம். அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் பெற்று முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 18 அங்குல வீல் பெறக்கூடும்.
கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட 3 முதல் 9 வயது சிறுவர்களுக்கான வீடா ஏக்ரோ எலெக்ட்ரிக் டர்ட் மாடலில் குறைந்த திறன் பேட்டரி மூலம் குழந்தையின் உயரத்திற்கு ஏற்ப இலகுவாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான சேஸ் பெற்றிருக்கும் என குறிப்பிட்டது. இந்த முறை EICMA 2024 கண்காட்சியில் எதிர்பார்க்கப்படுகின்ற குழந்தைகளுக்கான ஏக்ரோ டர்ட் பைக் உற்பத்தி நிலை மாடலாக விற்பனைக்கு வரக்கூடிய விபரங்களை ஹீரோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.