ரெட்ரோ ஸ்டைலை பெற்ற இந்தியாவின் ஒன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் க்ரீடன் மோட்டார்சைக்கிள் விநியோகம் பெங்களூரு மற்றும் ஹைத்திராபாத் மாநகரங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், கேரளாவில் ஜனவரி 2021-ல் துவங்கப்பட உள்ளது.
பெங்களூரு, ஹைத்திராபத் மாநகரங்களில் டீலர்கள் அறிவிக்கப்பட்டு விநியோகம் துவங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை மாநகரம், கேரளாவிலும் ஜனவரி 2021-ல் டீலர்கள் துவங்கப்பட்டு உடனடியாக டெலிவரி துவங்கப்படும் என ஒன் எலக்ட்ரிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தப்படியாக, டெல்லி மற்றும் மஹாராஷ்ட்டிராவில் விநியோகிக்கப்பட உள்ளது.
ஒன் எலக்ட்ரிக் க்ரீடன் சிறப்புகள்
ரெட்ரோ தோற்றம் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிக்கு அதிகபட்சமாக 95 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் சிங்கிள் சார்ஜிங் ஈக்கோ மோட் மூலமாக 110 கிமீ பயணமும், நார்மல் மோடில் 80 கிமீ பயணிக்க இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
5.5 கிலோவாட் பவர் மற்றும் 160 Nm டார்க் வெளிப்படுத்தும் ஒன் எலக்ட்ரிக் கிரீடன் பைக் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகளும், 3 KWh பேட்டரி சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஒன் எலக்ட்ரிக் க்ரீடன் விலை ரூ.1.29 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர் முகவரி விரைவில் வெளியிடப்பட உள்ளது.