Bike News ₹39,999 விலையில் ஓலா S1 Z மற்றும் Gig எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது..! Last updated: 26,November 2024 3:55 pm IST BHP Raja Share Ola s1z plus and S1 z electric scooterஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் கூடிய புதிதாக S1 Z மற்றும் ஜிக் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் S1 Z மாடல் இரண்டு 1.5 kWh பேட்டரியை பயன்படுத்தி இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Ola S1 Z escooterஒற்றை 1.5 kWh பேட்டரி ஆப்ஷனை பயன்படுத்தினால் 75 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு 1.5 kWh பயன்படுத்தினால் 145 கிமீ கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 3 Kw பவரை வெளிப்படுத்துகின்ற இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் S1 Z மற்றும் S1 Z+ என இரண்டு வேரியண்டுகள் கிடைக்கின்றது. S1 Z ஸ்கூட்டர் வழக்கமான மாடலாக அமைந்துள்ள நிலையில் S1 Z+ கூடுதலாக சுமைகளை எடுத்துச் செல்லும் வகையிலான கேரியர் பின்புறத்திலும், முன்பறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இரு மாடல்களும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. Ola S1Z – ₹ 59,999 Ola S1Z + – ₹ 64,999 Ola Gig escooterபல்வேறு சுமைகளை எடுத்துச் செல்ல வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான ஓலா Gig இ-ஸ்கூட்டரில் 250W மோட்டார் பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் 1.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் பெற்றுள்ளது. இதில் ஒற்றை பேட்டரி மட்டும் பயன்படுத்த இயலும் இதன் ரேஞ்ச் 112 கிமீ என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் டாப் ஓலா Gig+ இ-ஸ்கூட்டரில் 1.5kW மோட்டார் பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் 1.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் பெற்றுள்ளது. இதில் ஒற்றை பேட்டரி மட்டும் பயன்படுத்தினால் இதன் ரேஞ்ச் 81 கிமீ அல்லது பேட்டரி மட்டும் பயன்படுத்தினால் இதன் ரேஞ்ச் 157 கிமீ குறிப்பிடப்பட்டுள்ளது. Ola Gig – ₹ 39,999 Ola Gig+ – ₹ 49,999 (Ex-showroom Price)இரண்டு மாடல்களுக்கும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி ஏப்ரல் 2025 வழங்கப்பட உள்ளது.Ola gig and gig plus electric scooter Ola gig and gig plus e scooter Ola s1z and S1 z plus e scooter Ola gig and gig plus electric scooter TAGGED:Ola ElectricOla GIgOla S1Z Share This Article Facebook Previous Article 8 வருடம் அல்லது 80,000 கிமீ வரை வாரண்டியை அறிவித்த ஏதெர் எனர்ஜி Next Article 550 கிமீ ரேஞ்ச் வழங்கும் மஹிந்திரா BE 6e எஸ்யூவி வெளியிடப்பட்டது..!