இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன S1X ஸ்கூட்டர் மாடலில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன் பெற்று மாறுபட்ட வசதிகள் கொண்டதாக உள்ள நிலையில் முக்கிய சிறப்பம்சங்கள், ரேஞ்ச், ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
எஸ்1 எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டர் ஏற்கனவே 2Kwh, 3Kwh கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக 4kwh பேட்டரியை பெற்று 190 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.
ஓலா S1X பேட்டரி
S1X 2Kwh பேட்டரி பெற்று 6Kw பவரை வெளிப்படுத்தும் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 91 KM ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 கிலோவாட் மாடல் உண்மையான ரேஞ்ச் 75-80 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடல் 0-40kmph வேகத்தை எட்ட 4.1 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். அதிகபட்ச வேகம் மணிக்கு 85kmph வேகத்தில் செல்லும் திறனை பெற்றுள்ளது.
ஓலா S1X மற்றும் S1X+ 3Kwh பேட்டரி பெற்ற மாடல் வேகம் 90kmph, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 151 KM ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்டின் உண்மையான ரேஞ்ச் 100-110 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடல் 0-40kmph வேகத்தை எட்ட 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஓலாவின் S1X 4Kwh பேட்டரி பெற்று 6Kw பவரை வெளிப்படுத்தும் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 190 KM ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்டின் உண்மையான ரேஞ்ச் 135-140 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடல் 0-40kmph வேகத்தை எட்ட 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.
S1X சார்ஜிங் மற்றும் கிளஸ்ட்டர் வசதிகள்
S1X 2kwh, S1X 3kwh, S1X 4kwh மூன்று மாடல்களும் பிசிக்கல் கீ பெற்று 4.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று Eco, Normal, மற்றும் Sports என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. இந்த மாடல் 500w போர்ட்டெபிள் சார்ஜரை பெற்று 0-100 % சார்ஜ் பெற 7 மணி நேரம் 40 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் பெறுகின்றது. இதில் S1X 4kwh மாடல் 750 வாட்ஸ் சார்ஜரை பெற்று 0-100 % சார்ஜ் பெற 6 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்
S1X+ டிஜிட்டல் கீ பெற்று 5 அங்குல எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று Eco, Normal, மற்றும் Sports என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. இந்த மாடல் 500w போர்ட்டெபிள் சார்ஜரை பெற்று 7 மணி நேரம் 40 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் பெறுகின்றது. இந்த மாடலில் GPS ஆதரவுக்கான ஸ்மார்ட்போன் இணைப்பு, ரிமோட் பூட் லாக்/திறத்தல், க்ரூஸ் கன்ட்ரோல், OTA அப்டேட் போன்ற கூடுதல் அம்சங்களை பெறக்கூடும்.
மெக்கானிக்கல் அம்சங்கள்
ஒலா S1X வரிசையில் உள்ள நான்கு மாடல்களும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பரை பெற்று இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. 34 லிட்டர் கொள்ளளவு பெற்றுள்ள இந்த மாடல்கள் 160mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.
ஓலா S1X போட்டியாளர்கள்
ஓலா எஸ்1 எக்ஸ் மாடலுக்கு போட்டியாக ஏதெர் 450s, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், சிம்பிள் டாட் ஒன் உட்பட பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.
2024 ஓலா S1X ஆன் ரோடு விலை
ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.79,999 முதல் ரூ.1,09,999 வரை (எக்ஸ்ஷோரூம்) விற்பனை செய்யப்படுகின்றது.
- Ola S1X 2kwh – ₹ 92,456
- Ola S1X 3kwh – ₹ 1,03,543
- Ola S1X+ 3kwh – ₹ 1,13,432
- Ola S1X 4kwh – ₹ 1,25,065
(on-road price in Tamilnadu)