ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் குறைந்த விலை S1 ஏர் மாடலுக்கான டெலிவரி ஜூலை மாத இறுதியில் துவங்கப்படும் என ஓலா தலைவர் தெரிவித்துள்ளார். எஸ்1 ஏர் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 125 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே முன்பதிவு நடைபெற்று வரும் இந்த மாடலுக்கு முன்பாக மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டது. ஆனால் FAMEII மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு வேரியண்டுகளை ஓலா நீக்கியுள்ளது.
Ola S1 Air Escooter
3 kwh பேட்டரி பெற்றுள்ள ஓலா எஸ் 1 ஏர் இ-ஸ்கூட்டர் அதிகபட்சமாக 4.5 Kw பவரை வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் 85KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air Specs | |
Battery Capacity | 3kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 4.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 85 km/hr |
Range (km) | 125km (Eco) |
Modes | Eco, Normal, Sports |
Acceleration (0-60Km) | 9.3 Secs |
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டதாக உள்ளது. பீங்கான் வெள்ளை, நியோ மின்ட், கோரல் கிளாம், ஜெட் பிளாக் மற்றும் லிக்விட் சில்வர் என ஐந்து நிறங்களை பெற்றதாக வந்துள்ளது.
Ola S1 Air 3kWh – ₹ 1,22,890 (On-Road Price in TamilNadu)