Auto News

Gen-3 ஓலா எலக்ட்ரிக் S1 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வெளியானது.!

ஓலா எலக்ட்ரிக் S1 ஸ்கூட்டர்

ரூ.79,999 முதல் துவங்குகின்ற மூன்றாம் தலைமுறை S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தற்பொழுது புதிதாக S1 Pro+ 5.3kWh பேட்டரி பெற்ற டாப் வேரியண்ட் ரூ.1.70 லட்சம் விலையில் 320 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாம் தலைமுறை ஸ்கூட்டர்கள் முந்தைய ஹப் மவுன்டுக்கு பதிலாக தற்பொழுது மிட் டிரைவ் மோட்டார முறைக்கு மாற்றப்பட்டு செயின் டிரைவ் தரப்பட்டுள்ளது. முன்பாக பெல்ட் டிரைவ் பெற்றிருந்தது. புதிதாக வந்துள்ள மாடல்கள் சிறப்பான மென்பொருள் சார்ந்த வசதிகளை பெற்ற MoveOS 5 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Ola S1 Pro+ E scooters

இந்நிறுவனத்தின் டாப் மாடலாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓலா எஸ்1 புரோ+ 5,3Kwh பேட்டரி 4680 பாரத் பேட்டரி செல் பெற்ற மாடல் மணிக்கு 141 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் அதிகபட்சமாக 13KW பவர் வழங்குகின்ற மோட்டார் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 320 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து, மணிக்கு 128 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஓலா எஸ்1 புரோ+ 4Kwh பேட்டரி பெற்ற மாடல் அதிகபட்சமாக 13KW பவர் வழங்குகின்ற மோட்டார் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 242 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாடலிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்று ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சிவப்பு,  வெள்ளை, சில்வர், ஜெட் கருப்பு, ஸ்டெல்லர் நீலம், மிட்நைட் நீலம் ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

  • Ola S1 Pro+ 4kWh 1,54,999
  • Ola S1 Pro+ 5.5kWh 1,69,999

Ola S1 Pro E scooters

ஓலா நிறுவனத்தின் எஸ்1 புரோ 4Kwh மாடல் மணிக்கு 125 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 11KW பவர் வழங்குகின்ற மோட்டார் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 242 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்1 புரோ 3Kwh மாடல் மணிக்கு 117 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 11KW பவர் வழங்குகின்ற மோட்டார் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 176 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாடலிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்று ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சிவப்பு,  வெள்ளை, சில்வர், ஜெட் கருப்பு, ஸ்டெல்லர் நீலம், மிட்நைட் நீலம் ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

  • Ola S1 Pro 3kWh 1,14,999
  • Ola S1 Pro 4kWh 1,34,999

Ola S1x + E scooter

எஸ்1 எக்ஸ் 4Kwh மாடல் மணிக்கு 125 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 11KW பவர் வழங்குகின்ற மோட்டார் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 242 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்று ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என நான்கு ரைடிங் மோடுகளுடன் சிவப்பு,  வெள்ளை, சில்வர், ஜெட் கருப்பு, ஸ்டெல்லர் நீலம், மிட்நைட் நீலம் ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

  • Ola S1 x+ 4kWh 1,07,999

Ola S1x E scooters

குறைந்த விலையில் துவங்குகின்ற ஓலா S1 X ஸ்கூட்டரின் 2kwh பேட்டரி மாடல் மணிக்கு 101 கிமீ வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.

ஓலா S1 X ஸ்கூட்டரின் 3kwh பேட்டரி மாடல் மணிக்கு 115 கிமீ வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 176 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.

ஓலா S1 X ஸ்கூட்டரின் kwh பேட்டரி மாடல் மணிக்கு 123 கிமீ வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 242 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.

  • Ola s1X 2kWh 79,999
  • Ola s1X 3kWh 89,999
  • Ola s1X 4kWh 99,999

மேலும் GEN-2 ஸ்கூட்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது.

  • S1 X – 2kWh Rs 69,999
  • s1X 3kWh Rs 79,999
  • s1X 4kWh Rs 89,999
  • S1 Pro Rs 1,14,999
Share
Published by
MR.Durai