கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.25,000 வரையிலான S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை தள்ளுபடி அறிவிப்பு நடப்பு மார்ச் 31,2024 வரை பொருந்தும் என ஓலா எலக்ட்ரிக் உறுதிப்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஓலாவின் விலை குறைப்பு சலுகைகளின் படி ஓலா எஸ்1 புரோ வேரியண்டிற்கு ரூ.17,500 தள்ளுபடியும், எஸ் 1 ஏர் மாடலுக்கு ரூ.15,000 மற்றும் குறைந்த விலை எஸ் 1 எக்ஸ் ஸ்கூட்டருக்கு அதிகபட்ச தள்ளுபடி ரூ.25,000 அறிவிக்கப்பட்டது.
Ola Escooter
S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டுள்ள மாடல் ஆனது அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு மணிக்கு 120kmph கொண்டு சிங்கிள் சார்ஜில் 195 கிலோமீட்டர் ரேஞ்ச் வெளிப்படுத்தும் இந்த மாடல் விலை ரூ.1,47,499 உள்ள நிலையில் ரூ.17,500 குறைக்கப்பட்டு ரூ.1.30 லட்சம் ஆக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டராக அறியப்படுகின்ற S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3Kwh பேட்டரி பெற்ற மாடல் வேகம் 90kmph ஆக உள்ள நிலையில், ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 151 கிமீ ரேஞ்ச் பெற்றுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.1.10 லட்சம் ஆக இருந்த நிலையில் ரூ.25,000 வரை குறைத்து ரூ.84,999 ஆக அறிவித்துள்ளது.
அடுத்து மிக சிறப்பான நிறங்களை பெற்றுள்ள எஸ்1 ஏர் மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ பெற்றுள்ள மாடலின் IDC ரேன்ஜ் 125 கிமீ கொண்டுள்ளது. இந்த மாடல் விலை ரூ.1,19,999 ஆக உள்ள நிலையில் ரூ.15,000 குறைத்து ரூ.1.05 லட்சம் ஆக அறிவித்துள்ளது.
மார்ச் 31,2024 வரை விலை குறைப்பு சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சமீபத்தில் இந்திய அரசின் PLI திட்ட சலுகைகளும் கிடைத்துள்ளது.