ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் மீண்டும் தனது ஸ்கூட்டர்களின் விலையை ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை குறைத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள இந்நிறுவனம் விலை குறைப்பினை பிப்ரவரி மாதம் வரை கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
ஓலா S1X+ துவக்க நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.84,999, S1 Air ஸ்கூட்டர் விலை ரூ. 1,04,999 ஓலா S1 pro விலை ரூ.1,29,999 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைப்பு
ஓலா நிறுவனம் பிரத்தியேகமாக பிப்ரவரி மாதம் மட்டும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3Kwh பேட்டரி பெற்ற மாடல் வேகம் 90kmph, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 151 KM ரேஞ்ச் பெற்று விலை ரூ.1,09,999 ஆக இருக்கும் நிலையில் ரூ.25,000 குறைத்து ரூ.84,999 ஆக அறிவித்துள்ளது.
அடுத்து எஸ்1 ஏர் ஸ்கூட்டர் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டு அதிகபட்ச வேகம் 95 கிமீ கொண்டுள்ள ஸ்கூட்டரின் IDC ரேன்ஜ் 125 கிமீ கொண்டுள்ளமாடல் விலை ரூ.1,19,999 ஆக இருக்கும் நிலையில் ரூ.15,000 குறைத்து ரூ.104,999 ஆக அறிவித்துள்ளது.
டாப் S1 pro ஸ்கூட்டரில் 4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்ட S1 Pro மாடல் அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு 120kmph கொண்டு சிங்கிள் சார்ஜில் 195 கிலோமீட்டர் ரேஞ்ச் வெளிப்படுத்தும் இந்த மாடல் விலை ரூ.1,47,499 ஆக இருக்கும் நிலையில் ரூ.17,500 குறைத்து ரூ.1,29,999 ஆக அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் இந்திய சந்தையில் மாதந்தோறும் சராசரியாக 25,000 கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் நிலையில் தொடர்ந்து நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் இரு ச்சகர வாகன தயாரிப்பாளராக ஓலா எலக்ட்ரிக் விளங்கி வருகின்றது.