முன்பாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலை விற்பனைக்கு அதிகாரப்பூரவமாக பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட ரோட்ஸ்டர் X மின்சார பைக்கில் 2.5 kWh, 3.5kwh, மற்றும் 4.5 kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ola Roadster X
நவீனத்துவமான டிசைன் வடிவமைப்பினை பெற்றுள்ள இந்த பைக்குகளில் ரோட்ஸ்டர் X, ரோட்ஸ்டர் , ரோட்ஸ்டர் புரோ என மூன்று விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதலில் வரவுள்ள எக்ஸ் வரிசையின் ஆரம்ப விலை ரூ.79,999(2.5kwh), ரூ.84,999 (3.5kwh) மற்றும் ரூ.99,999 (4.5kwh) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மூன்று வேரியண்டும் 11Kw பவர் வெளிப்படுத்துகின்ற மோட்டாரை பெற்று ஸ்போர்ட்ஸ், ஈக்கோ மற்றும் நார்மல் என மூன்று விதமான ரைடிங் மோடுகளுடன் 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வெளிப்படுத்தும் ஓலா மூவ்ஓஎஸ் இடம்பெற்றிருக்கும்.
இதில் 2.5 kWh பேட்டரி உள்ள மாடல் மணிக்கு 105கிமீ வேகத்தை பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 117 கிமீ ரேஞ்ச் வழங்கும், அடுத்து இரண்டாவது 3.5kwh மாடல் அதிகபட்ச வேகம் 117km/hr கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 159 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் மற்றும் டாப் 4.5 kWh பேட்டரி கொண்ட வேரியண்ட் மணிக்கு 124 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன் சிங்கிள் சார்ஜில் 200 கிமீ வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
உற்பத்தி நிலை மாடல் பிப்ரவரி 5 ஆம் தேதி காட்சிப்படுத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரேஞ்ச் மேம்படுத்தப்படலாம் அல்லது சில மாறுதல்களை பெற்று வரக்கூடும். ஏற்கனவே முன்பதிவு நடைபெற்று வருவதனால் அடுத்த சில வாரங்களில் டெலிவரி துவங்கப்படலாம்.